மகளிர்க்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லும், முதல்வர் ஸ்டாலின் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு அவரது சகோதரி கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

”வேளாண் என்பது இயற்கை தான், ஆனால், இரண்டாம் போருக்கு பின்பு வெடிக்காத வெடி மருந்துகளை ரசாயன உரமாக்கிவிட்டனர். பசுமை புரட்சி என்பதை முதலில் விவசாயம் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால், அது வியாபாரம் ஆகிவிட்டது. நிறைய செய்திகளை இந்த நாட்டிற்கு வருங்கால தலைமைக்கு போதித்தவர் பேராசான் நம்மாழ்வார். விதை சேமிப்பு, பாரம்பரிய நெல் சேமிப்பு, நாட்டுக்கோழி, நாட்டு மாடு, என்று மக்கள் தேடித்தேடி வாங்குவதும், கணினி வேலை செய்து கொண்டிருப்பவர்களும் வேளாண் பக்கம் திரும்பி இருப்பதற்கு காரணம் நம்மாழ்வார். இயற்கை வேளாண்மை மீட்டெடுத்து நச்சு உரத்தை நிலத்தில் கொட்ட விடாமல் தடுப்பது என்று உறுதிமொழி எடுத்துள்வோம். விதை நெல்லை மரபணு மாற்று நெல்லாக மாற்றி விட்டார்கள் எனவே பல இடங்களில் அரசு கொடுக்கும் விதைநெல் விளையாமல் உள்ளது

image

கருணாநிதி நினைவாக மெரினா கடலில் பேனா வடிவம் நினைவு:

எழுதும் பேனாவை கடவுளிடம் வைத்து வழிபடுவது மூடத்தனம் என்றால்? எழுதாத பேனாவை கடலில் வடிவமைப்பது மூடப்பழக்கம் இல்லையா? இது அறிவார்ந்த மக்கள் செய்யும் செயலா? பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பிச்சை எடுக்கும் போது, பேனா நினைவிடம் தேவையா? கடலில் பேனா வடிவ நினைவிடம் வைப்பதால் என்ன நடைபெறும். சூழியல் பற்றி அவர்களுக்கு அக்கறை உள்ளதா? நாளை நடைபெறும் கருத்துக் கூட்டத்தில் எங்களது சுற்று சூழல் அணி சென்று எதிர்ப்பு தெரிவிப்போம்.

image

விவசாய நிலத்தை விமான நிலையம் நான்கு வழி சாலையாக மாற்ற முடியும் ஆனால் என்றாவது ஒரு நாள் அந்த இடத்தை விளைநிலங்களாக மாற்ற முடியுமா?

வ உ சி காமராஜ் பேரில் உள்ள துறைமுகத்தில் 50 அல்லது 60 சதவீதம் தான் ஏற்றுமதி இறக்குமதி நடைபெறுகிறது ஆனால் முழு அளவு ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறாதபோது காட்டுப்பள்ளியில் எதற்கு துறைமுகம்? அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பறப்பதற்கு போதுமான விமான சேவை இல்லாதபோது புதிதாக எதற்கு 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம்? இருக்கிற ஓடுதளத்தில் புல் முளைத்துள்ளது. அதை சீரமைக்க முடியவில்லை. புதிய விமான நிலையத்திற்கு நாற்பதாயிரம் கோடி ஒப்பந்தம், இதில் 15 ஆயிரம் கோடி திருட முடியும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை 80 சதவீதம் நிறைத்து விட்டதாக மக்கள் சொல்ல வேண்டும் இவர்கள் சொல்ல கூடாது தேர்தல் வாக்குவில் கொடுத்தது போல் ஏன் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்யப்படவில்லை ஆட்சியில் இருக்கும் போது ஒன்று சொல்வதை இல்லாத போது ஒன்று சொல்வது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேறொன்று பேசுவதா?

சமூக நீதியின் காவலர்கள் என்று சொல்பவர்கள் குடிவாரி கணக்கெடுப்பு எடுத்து குடிவாரி பங்கு பகிர்ந்து தராதவர்கள் எப்படி சமூக நீதி காவலர் என்று சொல்ல முடியும். பெரியாரைப் பற்றி சொல்பவர்கள் சொன்னதை செய்கிறார்களா?

imageimage

“உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின்பு வரும் விமர்சனங்களை அவரது செயல்பாட்டால் நிரூபிப்பார் என்று முதல்வர் கூறியுள்ளார் அதனை நானும் நம்புகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கனிமொழியை முதல்வராக்குங்களேன்..

”மகளிர் நிலை உயர வேண்டும் என்று கூறும் திமுகவின் நாடாளுமன்றத்தில் எவ்வளவு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளார்கள் அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு இடம் கொடுத்துள்ளார்கள். தைப்பொங்கலுக்கு மதுவிற்பனைக்கு 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள். பெண்கள் தாலி அறுத்து கொண்டு செல்லும் நிலைதான் தலைநிமிரலா? மகளிர் நிலை உயர தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு கனிமொழிக்கு முதல்வர் பதிவு தருவாரா ஸ்டாலினை விட அவர் தகுதியானவர் என்று நான் நம்புகிறேன் அவர் தனது தங்கைக்கு தான் விட்டு கொடுக்க சொல்கிறேன்” என்றும் சீமான் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.