அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, முந்தைய ஆட்சியில் உதய் திட்டத்தில் அதிமுக-வினர் கையெழுத்து போட்டதுதான் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு காரணம் என அமைச்சர் தாமோ.அன்பரசன் குற்றம் சாட்டினார்.

சென்னை கிழக்கு மாவட்ட அம்பத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் ‘சுயமரியாதையின் கிழக்கு’ என்ற தலைப்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது.

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fphoto.php%3Ffbid%3D701094941387209%26set%3Da.529134755249896%26type%3D3&show_text=true&width=500″ width=”500″ height=”333″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்று அந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பிகே.சேகர்பாபு, சுப.வீரபாண்டியன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக பேராசிரியர் அன்பழகன் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

image

இதைத் தொடர்ந்து அமைச்சர் தாமோ.அன்பரசன் பேசியபோது, “எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து சென்ற போது கலைஞருடன் தோளோடு தோளாக நின்று மீண்டும் திமுகவை மீட்டெடுக்க பாடுபட்டவர் பேராசிரியர் அன்பழகன். அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுக பொறுப்பல்ல. கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கமணி உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டது தான் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு காரணம்.

image

திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலகட்டத்தில் 2,22,420 கோடி முதலீட்டில் 197 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 650 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய அளவுக்கு தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் அமைந்து வருகிறது” என அமைச்சர் அன்பரசன் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.