வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் சுலபமாக பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் டெபிட் கார்டை வைத்து வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. பின்னாளில் மாதத்திற்கு இத்தனை முறை டெபிட் கார்டை கொண்டு ஏ.டி.எமில் பணம் எடுத்த பிறகும் கார்டை ஸ்வைப் செய்தாலோ, ஏ.டி.எமில் பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுத்தாலோ அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு UPI முறையிலான பணப்பரிவர்த்தனைகள் கைகொடுத்தன. இருப்பினும் பணப்புழக்கம் தேவையின் காரணமாக இன்னமும் பெரும்பாலான மக்கள் ஏ.டி.எம் மையங்களை நம்பியிருக்கிறார்கள்.

இருப்பினும் சமயங்களில் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் போது சில தொழில்நுட்ப கோளாறோ, கடவுச்சொல் மறப்பது, ஏ.டி.எம் கார்டையே மறந்துவிட்டு ஏ.டி.எம் மையங்களுக்கு செல்வதும் நிகழ்வதுண்டு. இப்படியான சூழலை தொழில்நுட்ப வசதியைக் கொண்டு இனி எளிதில் கையாளும் வகையில் வந்திருப்பதுதான் ஏ.டி.எம் கார்டே இல்லாமல் ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்கும் முறை. அதனை எப்படி மேற்கொள்வது என்பதை பின்வரும் வழிமுறைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

image

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

1. முதலில் நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி கார்டிலெஸ் கேஷ் ( அட்டையில்லாமல் பணம் ) என்ற வசதியை கொடுக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

2. இந்த வசதியை உங்கள் வங்கி வழங்கினால், அதற்குரிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு SBIக்கு YONO, ICICI-க்கு iMobile, Bank of baroda-க்கு BOB mConnect Plus, Indian bank-க்கு INDOASIS என அந்தந்த வங்கி பயன்பாட்டுக்கான செயலிகளை ப்ளேஸ்டோர் (android) அல்லது ஆப் ஸ்டோர்களில் (iOS) இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். 

image

3. அப்ளிகேஷனில் உள்ள ‘card-less cash withdrawal’ என்பதைக் கிளிக் செய்யவும்.

4. அதில் நீங்கள் எடுக்க வேண்டிய பணத்தின் அளவை நிரப்பவும். ( SBI வாடிக்கையாளராக இருந்தால் 500 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்).

5. பின்னர் தற்காலிக PIN எண்ணை கொடுக்க வேண்டும். (அந்தந்த வங்கிகளின் நிர்ணயித்திற்கு ஏற்ப 4 அல்லது 6 இலக்க எண்கள் கொடுக்கவேண்டும்)

6. T&C செக் பாக்ஸில் க்ளிக் செய்த பிறகு சப்மிட் கொடுத்ததும் வரும் OTP எண் வரும். 2 அல்லது 4 மணிநேரத்திற்குள் அந்த OTP எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எமிலிருந்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.

How will cardless cash withdrawal system at ATMs work?

OTP & தற்காலிக பின் எண்ணை வைத்து எப்படி ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்கலாம் என்பதை காணலாம்:

1. ஏ.டி.எம் மிஷினில் உள்ள cardless cash என்பதை க்ளிக் செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை முதலில் கொடுக்கவும்.

2. அந்த மொபைல் எண்ணுக்கு வந்த OTP-ஐ உள்ளிடவும்.

3. பின்னர், அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்ட தற்காலிக பின் எண்ணை கொடுக்கவும். 

4. அப்ளிகேஷனில் குறிப்பிடப்பட்ட பணத்தை உள்ளிட்டு டெபிட் கார்டு எல்லாமல் ஏ.டி.எமில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதுபோக, UPI மற்றும் QR Code உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்தியும் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் ஏ.டி.எமில் இருந்து பணத்தை எடுக்க முடியும். ஆனால் இந்த சேவைகள் எல்லாம் அந்தந்த வங்கிகளில் செயல்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதையும் வாடிக்கையளர்கள் முன்னமே அறிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகும். இப்படியாக ATM கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுப்பதால் பல்வேறு மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் உதவுகிறது. 

-ஷர்நிதா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.