கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் வாழும் தமிழர்கள் வெளியிட்டுள்ள தீம் பாடல், உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

மத்தியகிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால்பந்து போட்டியை உலக நாடுகள் பிரமிக்கும் வகையில் நேர்த்தியாக நடத்திவருகிறது. கால்பந்து போட்டிக்கான பிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமின்றி, கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

image

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பார்வை, கத்தார் தோகாவை நோக்கியே உள்ளது. கத்தாரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பணிநிமித்தமாக சென்று வசித்து வருகின்றனர். அதற்கு, கத்தார் நாட்டுக்கு தமிழர்கள் சார்பில் நன்றி செலுத்தும் விதமாக கத்தார்-உலக கால்பந்து போட்டிக்காக ”கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை” ’குன் ஷாகிரான்’ என்ற ஆங்கில தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

image

இந்தப்பாடலை தமிழ்மகன் அவார்ட்ஸ்-ஸின் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் இயக்கி உள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப் என்பவரின் பாடல் வரி மற்றும் இசையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

image

தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக அந்நாட்டின் அமைச்சர் மற்றும் தூதர அதிகாரிகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளதுடன், கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய தொலைக்காட்சியான கத்தார் டிவி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருதுமொழி வானொலிகளிலும் ஒலிபரப்பி வருவது தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

image

முகநூலில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பல ஆயிரம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.