அஸ்ஸாமைச் சேர்ந்த 17-ம் நூற்றாண்டு போர் தளபதியான லச்சித் போர்புகன் என்பவரின் 400-வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் , வரலாற்றாசிரியர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துக் கொண்டார். அப்போது உரையாற்றிய அமித் ஷா, “நான் வரலாற்று மாணவன், நமது வரலாறு சரியாக முன்வைக்கப்படவில்லை. அது திரிக்கப்பட்டிருக்கிறது என்று நான் பலமுறை கேள்விப்படுகிறேன். ஒருவேளை அது சரியாக இருக்கலாம்.

இந்திய வரலாறு

ஆனால், இப்போது நாம் இதைச் சரிசெய்ய வேண்டும். வரலாற்றைச் சரியான முறையில் வழங்குவதிலிருந்து நம்மைத் தடுப்பது யார் என உங்களிடம் கேட்கிறேன். இப்போது எழுதப்பட்டிருக்கும் வரலாறு சரியாக இல்லை. எனவே, இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டில் 150 ஆண்டுக் காலம் ஆட்சி செய்த 30 பேரரசுகளை ஆய்வு செய்யுங்கள். அதேபோல், விடுதலைக்காகப் போராடிய 300 வீரர்களைக் கண்டறிந்து ஆய்வு செய்யுங்கள்.

அமித் ஷா

எனவே, ஆராய்ச்சி செய்து வரலாற்றை மாற்றி எழுதுங்கள். இப்படித்தான் வருங்கால சந்ததியினரையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களின் பெரிய நன்மைக்காக வரலாற்றின் போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். முகலாய பேரரசுகளின் விரிவாக்கத்தைத் தடுப்பதில் லச்சித் போர்புகன் ஆற்றிய பங்கு அளப்பறியது. சரிகாட் போரில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் முகலாயர்களை தோற்கடித்தார்” எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.