22ஆவது கால்பந்து உலகக்கோப்பை இன்று நவ 20 தொடங்கி அடுத்த மாதம் டிச 18 வரை நடைபெறவிருக்கிறது. இன்று இரவு 9.30 மணிக்கு நடக்கவிருக்கும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் அணியும் ஈக்வேடார் அணியும் மோதவிருக்கின்றன.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே பல சுவாரசியங்கள் மற்றும் பல புதுமைகளுடன் இன்று தொடங்குகிறது உலக கால்பந்து உலகக்கோப்பை திருவிழா. அதிக பொருட் செலவில், முதல் முறையாக உலகக்கோப்பையை நடத்துகிறது கத்தார் நாடு. அதிக வெப்பநிலை நிலவும் காரணத்தால் மைதானத்தை குளிரூட்டும் வசதிகளுடன் கத்தார் நாடு புதுமையுடன் நடத்துகிறது.

image

நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் காயத்தின் காரணமாக வெளியேறி இருப்பது, கால்பந்தின் மாடர்ன் டே ஜாம்பவான்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவர்களின் கடைசி உலகக்கோப்பை முதலிய முக்கிய ஸ்டேட்ஸ்களோடு தொடங்கப்பட இருக்கிறது இந்த 2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர்.

உலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள போட்டியாக விளங்கும் கால்பந்து போட்டியின் உலகக்கோப்பை தொடரை காண சுமார் 12 லட்சம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தனை ரசிகர்களுக்குமான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளது கத்தார். என்ன தான் பணத்தின் உதவியால் கத்தார் இந்த வாய்ப்பை தக்கவைத்துகொண்டது என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், கிடைத்த முதல் வாய்ப்பை பிரமாண்டமாக பயன்படுத்தி வருகிறது கத்தார் நாடு. முதல் முறையாக உலகக்கோப்பையில் கால் பதித்திருக்கும் கத்தார் அணியும் சிறப்பாக செயல்படும் என்று எண்ணவைத்துள்ளது.

image

இன்று இரவு தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இரவு 9.30 மணிக்கு கத்தார்-ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் அடுத்த மாதம் டிச 18 அன்று முடிவுக்கு வரும். குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் பங்கேற்கும் 32 அணிகளில் 16 அணிகள் அடுத்த நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும், அதில் தகுதிபெற்று முன்னேறும் 8 அணிகள் கால் இறுதிபோட்டிகளில் பங்குபெற்று விளையாடும். கால் இறுதி போட்டிகள் டிச 9, 10, 11 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கின்றன. அரையிறுதிப்போட்டிகள் டிச 14, 15ஆம் தேதிகளில் நடைபெறும். இறுதிப்போட்டியில் டிச 18 அன்று வெற்றிபெரும் ஒரு அணி உலகசாம்பியன் என்ற மகுடத்தை சுமக்கும்.

image

கவனிக்கப்படக்கூடிய முக்கிய வீரர்கள்

ரொனால்டோ

போர்ச்சுக்கல் அணியின் ஜாம்பவான் பிளேயரான ரொனால்டோ, உலகக்கோப்பை தொடர்களில் 11 போட்டிகளில் 7 கோல்களை அடித்துள்ளார். நாக் அவுட் போட்டிகளில் ஒருமுறை கூட கோல் அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை இந்த உலகக்கோப்பை தொடரில் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா காலத்திற்க்குமான ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் இவர் உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்ததே இல்லை.

image

லயோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் மற்றும் நட்சத்திர வீரரான மெஸ்ஸியும், உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை உடைக்கும் முனைப்பிலும், முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பிலும் களமிறங்க உள்ளார். உலகக்கோப்பை 11 போட்டிகளில் 6 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி. 2014ஆம் ஆண்டு இறுதி போட்டிவரை சென்ற அர்ஜெண்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. அந்த தொடரின் நாயகனாக மெஸ்ஸி தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெய்மர்

image

பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் இக்கால இளைஞர்களின் பிடித்தமான ஒரு வீரராவார். 3 விதமான பொசிசனில் இருந்துகூட சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடிய வீரர். பிரேசில் அணிக்காக 75 கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார். முதலிடத்தில் 77 கோல்களோடு இருக்கும் பீலேவை பின்னுக்குதள்ள இன்னும் 3 கோல்களே நெய்மருக்கு தேவையாக உள்ளது.

ஹாரி கேன்

image

இங்கிலாந்து அணியின் கேப்டனான இவர், அவர் அணிக்காக 51 கோல்களை அடித்துள்ளார். 2018 ரஷ்ய கோப்பையில் கோல்டன் பூட் விருதை பெற்று அசத்தினார். இந்த உலகக்கோப்பையின் மற்றொரு முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

கிளியான் பாப்பே

image

நடம்பு சாம்பியனான பிரான்ஸ் அணியின் கவனிக்கப்படக்கூடிய வீரராக பாப்பே பார்க்கப்படுகிறார். 2018 பைனலில் கோல் அடித்து அசத்தியிருந்தார். ரஷ்ய உலகக்கோப்பையில் சிறந்த இளம் வீரர் என்ற விருதை தட்டிச்சென்றார்.

இதர அணி வீரர்களான கரேத் பேல்(வேல்ஸ்), லெவண்டோவ்ஸ்கி( போலந்து), ரோமலு லுகாகு( பெல்ஜியம்), கிறிஸ்டியன் எரிக்சன்(டென்மார்க்) மற்றும் லூகா மோட்ரிக் ( குரோஷியா) வீரர்கள் கவனிக்கப்படக்கூடிய வீரர்களாக பார்க்கப்படுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.