டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் விளக்கம் அளித்துள்ளார்.

சிட்னியில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று முதல் ஆளாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் இழப்பின்றி 16 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்திய டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இவர்களெல்லாம் இனி தேவையா?? – குவியும் விமர்சனங்கள்!

ஒவ்வொரு முக்கியமான சர்வதேச தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடையும் போது பலமான விமர்சனங்கள் எழுவது வழக்கம். 2007 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடக்கத்திலேயே வெளியேறிய போது இந்தியாவில் போராட்டங்களே நடைபெற்றது. இந்திய வீரர்களின் வீடுகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் கூட அரங்கேறியது. வீரர்களின் படங்களை தீயிட்டும் கொளுத்தினர். அந்த வகையில் இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த உடன் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதில் ரோகித் சர்ம

இந்நிலையில், இந்தியாவின் தோல்வி குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிடம், மூத்த வீரர்களான ரோகித் சர்மா (35), விராட் கோலி (34), ரவிச்சந்திரன் அஸ்வின் (36), புவனேஷ்வர் குமார் (32), முகமது ஷமி (32) ஆகியோரின் ஓய்வு மற்றும் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரையிறுதியில் தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்ல விரும்பினோம். ஆனால் அவர்கள் அனைத்து விதத்திலும் சிறந்த அணியாக இருந்தனர். இதுபோன்ற தோல்விக்குப் பிறகு, உடனடியாக சில விஷயங்களைப் பற்றி சிந்திப்பது கடினம். ஒட்டுமொத்தமாக, இந்தத் தொடர் முழுவதுமே எங்களது திறமைகளை வெளிப்படுத்தி, நாங்கள் நன்றாகவே விளையாடினோம்.

image

இந்தத் தொடரில் நாங்கள் செய்த தவறுகளை மேம்படுத்திக்கொண்டு, அடுத்த உலகக் கோப்பைக்கு ஏற்றவாறு தயார் படுத்திக்கொள்வோம். இந்தத் தொடரில் நன்றாகவே பேட்டிங் செய்து வந்தோம். அரையிறுதிப் போட்டியில் ஆட்டம் தொடங்கியபோது, சிறிது தடுமாற்றமாக இருந்ததாக வீரர்கள் கூறினார்கள். எனினும் கடைசி ஓவரை நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். நாங்கள் இந்தப் போட்டியில் 180-185 ரன்களை எடுத்திருக்க வேண்டும்.

மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது. மேலும் அதைப் பற்றி சிந்திக்க இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. உண்மையில் தரமான வீரர்கள் இங்கு உள்ளனர். இதைப் பற்றிப் பேசவோ சிந்திக்கவோ தற்போது சரியான நேரம் இல்லை. அடுத்த உலகக் கோப்பைக்குத் தயாராகுவதற்கு எங்களுக்கு போதுமான நேரமும், போட்டிகளும் இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.