ஒவ்வொருவரும் வெளிநாட்டிற்குச் செல்லும்போது, எப்போதும் ஒருவித அமைதியற்ற உணர்வு ஏற்படும். ஆனால் வெளிநாட்டு மக்களின் அன்பான வரவேற்பும், கவனிப்பும், உதவியும் கிடைக்கும் போது மனம் அமைதியாகி மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வரவேற்க ஆயுதமாகிவிடும்.

தங்கள் மகளின் டென்னிஸ் போட்டிக்காக பாகிஸ்தானுக்குச் சென்ற இந்தியக் குடும்பம், அங்கு ஒரு பாகிஸ்தானியரிடம் லிப்ட் கேட்டுள்ளனர். இதன் மூலம் அந்த பாகிஸ்தான் உள்ளூர்வாசி இந்திய குடும்பத்தை வரவேற்றுள்ளார். இதனையடுத்து அவர் செய்த நெகிழ வைக்கும் சம்பவத்தை பதிவு செய்யப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்திலிருந்து பாகிஸ்தான் சென்ற ஒரு குடும்பத்திற்கு லிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் உள்ளூர்வாசியான தாஹிர் கான், ‘ இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய குடும்பத்தினர் செல்வதை அறிந்த தாஹிர், அவர்கள் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னுடன் உணவு உண்ண வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனை தொடர்ந்து, இந்திய குடும்பம் தாஹிருடன் ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுவதையும், அண்டை நாட்டில் தங்களின் இனிமையான அனுபவங்களை வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


டி20 உலகக் கோப்பை ஜாலியான விவாதத்துடன் இந்த விருந்தோமல் நடைப்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், ‘, “ஆப் விராட் கோலி ஹுமைன் டி டோ, ஆப் டிராபி லேகர் ஜெய்யின் (விராட் கோலியை எங்களுக்குக் கொடுங்கள், நீங்கள் கோப்பையை எடுத்துக் கொள்ளலாம்) ” என்று ஜாலியாக கூறுகிறார்.

image

டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள வந்த சிறுமி, ’இதுபோன்ற மனமார்ந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றும், பாகிஸ்தான் மக்களின் விருந்தோம்பலை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ’’இரு தரப்பிலும் உள்ளவர்கள் எப்போதும் நல்லவர்கள். அரசியல்தான் மக்களைத் தள்ளி வைக்கிறதுஎன்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் – பால் விரும்பியா நீங்கள்? ஆனால், அது உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல.. எச்சரிக்கும் ஆய்வுகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.