ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டாவிலும் பெரிய அளவிலும் பணீநீக்கம் செய்யப்பட உள்ளது என கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மற்றும் புதிதாக பணியமர்த்தலையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப பணிநீக்கங்களில் இது ஒன்றாகும். மெட்டாவின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக செய்யப்பட்ட மிக பெரிய பணிநீக்கம் இது தான்.

முன்னதாக மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவர்ஸ் முதலீடுகள் பலனளிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகும் எனவும், செலவுகளைக் குறைக்க குழுக்களும் மற்றும் நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கிறது எனவும் கூறியிருந்தார். மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க் கடந்த புதன்கிழமையன்று, தனது பணியாளர்களில் 13% அதாவது 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை லேப் ஆஃப் செய்ய இருப்பதாக கூறியது.

image

தொழில்நுட்ப நிறுவனங்களை உயர்த்திய வளர்ச்சி மற்றும் அவற்றின் மதிப்பீடுகள் அவரகளுக்கே பேரழிவாக மாறியுள்ளன. பல தசாப்தங்களாக உயர்ந்து வந்த பணவீக்கம் மற்றும் வேகமாக உயரும் வட்டி விகிதங்களால் மெட்டா, அதன் பங்குகளில் அவற்றின் மதிப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இழந்துள்ளன. இதனால் உடனடி நடவடிக்கையாக, செலவினங்களை குறைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு மெடா வந்துள்ளது.

செப்டம்பர் 30 நிலவரப்படி, மெட்டா அதன் வெவ்வேறு தளங்களில் உலகம் முழுவதும் சுமார் 87,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது, இதில் சமூக ஊடக தளங்களான Facebook மற்றும் Instagram மற்றும் செய்தியிடல் தளமான Whatsapp ஆகியவை அடங்கும்.

image

இதே போல், கடந்த வியாழன் அன்று, சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களான ஸ்ட்ரைப் மற்றும் லிஃப்ட் பெரிய அளவிலான பணிநீக்கங்களை அறிவித்தன, அதே நேரத்தில் அமேசான் தனது கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியமர்த்துவதை நிறுத்திவைத்துள்ளதாக கூறியது. ட்விட்டர், புதிதாக எலோன் மஸ்க்கால் கையகப்படுத்தப்பட்டது. அதன் 7,500 ஊழியர்களில் பாதியை கடந்த வாரம் திடீரென நீக்கியது. ஃபேஸ்புக் மற்றும் ஆல்பாபெட்டின் கூகுள் போன்ற விளம்பர ஆதரவு தளங்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களுடன் போராடுவதால் விளம்பரதாரர்களின் பட்ஜெட் குறைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் – ஆரம்பிக்கலாங்களா… இந்தியக் காடுகளில் வேட்டையை தொடங்கிய ‘சீட்டாக்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.