ஆரோன்’ஸ் பார்ட்டி (Come Get It) என்ற ஆல்பம் மூலம் பிரபலமான அமெரிக்க பாடகர் ஆரோன் கார்டர் இன்று அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 34.

Backstreet Boy பாடல் குழுவின் நிக் கார்டரின் சகோதரரான ஆரோன், கலிஃபோர்னியாவின் லான்காஸ்டரில் உள்ள அவரது வீட்டின் பாத் டப்பில் இறந்துகிடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலை 10:58 மணியளவில் கார்டரின் வீட்டிலிருந்து வந்த அழைப்பை அடுத்து அங்குசென்ற அதிகாரிகள் ஒரு உடலைக் கண்டுபிடித்தனர், ஆனால் இன்னும் அந்த நபரை சரியாக அடையாளம் காண முடியவில்லை என்று ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் AFP-யிடம் கூறியுள்ளார். இதுகுறித்து கார்டரின் மேனேஜரிடம் கேட்டபோது உடனடியாக பதிலளிக்கவில்லை என்று AFP கூறியுள்ளது.

image

ஆரோன் கார்டர் டிசம்பர் 7, 1987ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில் தம்பா என்ற இடத்தில் பிறந்தார். இவர் தனது 7 வயதிலிருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 1997ஆம் ஆண்டு முதல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இரண்டாண்டுகள் முயற்சியில் ஆரோன்’ஸ் பார்ட்டி (Come Get It), 3 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது அவரது மாநில இளைஞர்களின் இதயத்துடிப்பை அதிகரித்தது. அதன்பிறகு அவர் நிக்கலோடியோன் மற்றும் டிஸ்னி நிகழ்ச்சிகளில் வழக்கமாக பங்கேற்க ஆரம்பித்தார். இதில் பிரபலமான “லிசி மெகுவேரில்” தோன்றினார்.

image

தனது மூத்த சகோதரர் அங்கத்தினராக இருந்த Backstreet Boy குழுவுடன் சேர்ந்து கார்டரும் பல இடங்களில் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் வயதாக ஆக இசைக்கலைஞருக்கான நட்சத்திர அந்தஸ்து மங்கத் தொடங்கியது. ஆனால் கார்டர் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் ஆஃப்-பிராட்வே தயாரிப்புகளில் தோன்றி, சில புதிய இசையை ஆன்லைனில் வெளியிட்டார்.

image

ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள், ஐந்து கார்டர் உடன்பிறப்புகளுக்கிடையில் வெளிப்படையான சச்சரவுகள் மற்றும் பணத்திற்காக குடும்ப சண்டைகள் போன்றவை சிறுபத்திரிகைகளுக்கு தீனியாக மாறியது. 2011 ஆம் ஆண்டில், கார்ட்டர் ஒரு சிகிச்சை நிலையத்திற்கு சென்றார் என்று பத்திரிகைகளுக்கு தெரியவந்தது. அப்போது கார்டர் தனது ரசிகர்களிடம் “வாழ்க்கையில் முக்கிய விஷயம் மனிதனாக இருப்பது குறித்து பயப்பட வேண்டாம்” என்று கூறினார்.

image

மறுவாழ்வு மைய சிகிச்சைக்கு பிறகு கார்டர் கனடாவில் இசை சுற்றுலாவாகச் சென்றுமீண்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். மில்லியன் கணக்கில் கடனில் தவித்த கார்டர் 2013 இல் திவால் மனு தாக்கல் செய்தார், அதில் பெரும்பகுதி வரி தொடர்பானது. மேலும் இவர்மீது உடைமை வழக்குகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு வழக்குகளுக்குள் சிக்கினார் கார்டர். 2017இல் அவரது ஒல்லியான தேகத்தால், சட்டவிரோதமாக போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து பகிரங்கமாக விவாதித்தார்.

image

கவலை மற்றும் தூக்க பிரச்னை காரணமாக 2018ஆம் ஆண்டு அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில், அவர் இனி ஒரு “விபத்தில் சிக்கியவராக” பார்க்கப்பட மாட்டார் என்று பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.