சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இதுவரை வசூலாகியுள்ள தொகை குறித்து விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ள தகவலின்படி, “சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி இதுவரை 17453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி 1,41,48,555 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் 50,05,256 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி 5,096 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39,42,208 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு அதில் 16,47,600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி 2284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,39,518 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு அதில் 5,85,800 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடக்கம்! |  New Fine Collection list for Traffic violation Starts in Chennai |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

மேலும் தவறான திசையில் வாகனத்தை சென்றதாக கூறி கடந்த 10 நாட்களில் 878 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,53,201 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு அதில் 1,63,200 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.  

தெளிவாக இல்லாத பதிவெண் தொடர்பாக 590 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 591 வழக்குகள் கடந்த 10 நாட்களில் பதிவு செய்யப்பட்டு 37,68,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு 10,30,000 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக 716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கடந்த 10 நாட்களில் மட்டும். போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் சென்றதாக கூறி கடந்த பத்து நாட்களில் 629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய வாகன திருத்த சட்டம் தொடர்பாக காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் அதிக அபராதம் வசூலிக்க வேண்டும் என்கின்ற நோக்கம் இல்லை. மாறாக இதன் மூலம் பொதுமக்கள் சட்ட ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே காவல்துறை நடந்து கொள்கிறது. அதேபோல் இந்த முறை 38 சதவீதம் வரை போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 13 சதவீதம் சென்னையில் சாலை விபத்துகளும் குறைந்துள்ளது.

image

போக்குவரத்து விதிமுறைகளை மீறி காவலரிடம் சிக்கிக் கொள்ளும் நபர்கள் அபராதம் செலுத்த மறுத்தாலும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்தாலும் வாகன திருத்த சட்டம் மட்டும் இன்றி குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படுவார்கள்.

கோபாலபுரத்தில் காரில் சென்ற நபருக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி 54 முறை செலன் அனுப்பப்பட்டது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்ற ஒன்று. இதுபோல் வேறு நபர்களுக்கும் நடைபெற்று இருந்தால் அதனை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்யப்படும். 

குடிபோதையில் வாகனம் ஊட்டிய நபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஆபிரகையை குறிப்பிட்ட 14 நாட்களுக்குள் செலுத்த தவறினால் உரிய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆங்காங்கே கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.