புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் துணை ஆணையர் அந்தஸ்தில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.மோகன்ராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

வங்கியில் மோகன்ராஜ் கணக்கில் பணம் இல்லாததால் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் அவர் கொடுத்த காசோலை, திரும்பி வந்ததால் அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் அளித்தார்.

புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி போத்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பைனான்சியர் போத்ரா உயிரிழந்ததை அடுத்து, அவரது மகன் ககன்போத்ரா இந்த வழக்கை நடத்தி வந்தார்.

image

இந்நிலையில் இந்த மனு நீதிபதி எஸ்எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும், புகார் கொடுத்த காலகட்டத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொதுமக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கக்கோரி சில விவரங்களோடு புகார்கள் அளிக்கப்பட்டால் அந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு காலதாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரசு அதிகாரிகள் மீதான நம்பிக்கை போய்விடும் என்று கூறியுள்ளார்.

புகார்கள் மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வதை தவிர்க்கலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.