பிரேசில் பிரதமராக லூலா டா சில்வா ஜனவரி 1ம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தேர்தல் முடிவை ஏற்க மறுத்து பேரணி நடத்தி வருகின்றனர். 

ஆயிரக்கணக்கான போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் முழுவதும் தெருக்களில் இறங்கி, முக்கிய நெடுஞ்சாலைகளைத் தடுத்து, லூலா பதவியேற்பதைத் தடுக்க ஆயுதப் படைகளுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் லூலா 50.9% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட போல்சனாரோவின் 49.1 % வாக்குகள் பெற்றிருந்தார். இதை தொடர்ந்து பிரேசிலில் மூன்றாவது முறையாக பிரதமாகிறார் லூலா. இந்த தேர்தல் முடிந்த பிறகு உலகின் மிக கடுமையான ஒரு தேர்தல் நடந்து முடிந்துள்ளது என கூறப்பட்டது. அதற்கு காரணம், நேரடியாக இடது மற்றும் வலது கட்சிகள் மோதிக்கொண்டது.

image

இடதுசாரிய கட்சியான (Partido dos Trabalhadores) தொழிலாளர் கட்சிக்கும் , வலதுசாரிய கட்சியான லிபரல் கட்சி (PL )-க்கும் நடந்த கடுமையான போட்டியில் போல்சனாரோவின் லிபரல் கட்சி தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து லுலா டா சில்வா ஜனவரி 1ம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில், தேர்தல் முடிவை ஏற்க மறுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

தனது ஆதரவாளர்கள் இரண்டு நாட்களாக நடத்தும் போராட்டம் குறித்து எதுவும் பேசாமல் இருந்த போல்சனாரோ, தற்போது தனது மெளனத்தை உடைத்துள்ளார். தனது உரையில், ‘’ குடியரசின் ஜனாதிபதியாகவும் ஒரு குடிமகனாகவும், நமது அரசியலமைப்பின் அனைத்து கட்டளைகளையும் நான் தொடர்ந்து மதிப்பேன் ’’என சுருக்கமாக முடித்துக்கொண்டார். லூலாவின் வெற்றி குறித்து எதுவும் பேசவில்லை.

image

பின்னர் பேசிய தலைமை அதிகாரி, போல்சனாரோ அரசாங்கத்திற்கான மாற்றத்தை அங்கீகரித்துள்ளார். எனவே ஜனவரி 1 ஆம் தேதி லூலாவின் பதவியேற்பு நடத்தப்படும் என்றார். போல்சனாரோவுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் எட்சன் ஃபச்சின், “அது முடிந்துவிட்டது. எனவே, இனிமேல் முன்னோக்கிப் பார்ப்போம்’ என தெரிவித்துள்ளார்.

2003 முதல் 2010 வரை அதிபராக பதவி வகித்த லூலா, இப்போது ஆழமாக பிளவுபட்ட தேசத்தை ஒன்றிணைக்கும் கடினமான சவாலை எதிர்கொள்ளவிருக்கிறார். தனது ஆட்சிகாலத்தில் பல நலத்திட்டங்கள் செய்திருந்தாலும் பல ஊழல் குற்றச்சாட்டிகளில் சிக்கிய லூலா, பிரேசிலின் கரண்சி மதிப்பை உயர்த்தி, பொருளாதாரத்தை மீட்டுக்கொண்டு வர வேண்டிய நெருக்கடிகளை எல்லாம் கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

இதையும் படியுங்கள் – வாழ்வின் மீது ஏதோ ஒரு நம்பிக்கையை நிச்சயம் விதைக்கும்! – “நித்தம் ஒரு வானம்” திரைப்பார்வை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.