காலநிலை மாற்றத்தால் உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் ஐரோப்பாவும் தப்பவில்லை. ஆனால் மற்ற உலக நாடுகளை விடவும் ஐரோப்பா கூடுதலாக காலநிலை மாற்றத்தை முன்னதாகவே எதிர்கொண்டுவருகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில், உலகின் மற்ற பகுதிகளை விடவும் இந்த ஐரோப்பிய கண்டம் இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைந்துள்ளது என உலக வானிலை அமைப்பின் அறிக்கை கூறுகிறது. பூமியின் வேறு எந்தக் கண்டத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமான வெப்பநிலை அதிகரிப்பை இந்த ஐரோப்பிய கண்டம் அனுபவித்து வருகிறது. இதனால் காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் பிற காலநிலை மாற்றம் தாக்கங்கள், மற்ற கண்டங்களில் நிகழ்வதை விட அதிகமாக நடந்துள்ளது.

image

காலநிலை மாற்றமும் கோடைகால வெப்பமும்!

இதனின் பாதிப்பு பல்லூயிர், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் தவிக்கும் ஐரோப்பாவில் கோடைக்காலமும் சேர்ந்து கொண்டதால், ஆல்பைன் பனிப்பாறைகள் உருகி, மத்தியதரைக் கடலில் நீரையும் வெப்பமாக்கி உள்ளது.

image

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. வனப்பகுதிகள் காட்டுத்தீக்கு எரிபொருளாகின்றன. உலக வெப்பமயமாதலில் விளைவுகளை எப்படி இருக்கும் என ஐரோப்பா, நம் கண் முன் ஒரு நேரடி படத்தை காட்டி வருகிறது. உலகின் எந்த கண்டமும் பாதுக்காப்பாக இல்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெப்ப அலையா? அப்படி என்றால் என்ன? அதனால் என்ன பிரச்னை?

வளிமண்டலத்தின் உயர் அழுத்தங்களுக்கிடையே நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சுழற்சிதான் வெப்ப அலை உருவாக காரணம் ஆகும். கோடைகாலத்தின் சூரிய ஒளி, வட ஆப்பிரிக்காவின் அடர்த்தியான நிறைகொண்ட காற்றுடன் இணைந்து ஐரோப்பிய தீபகற்பத்திற்குள் “வெப்ப அலையாக” நுழைந்தது. ஐரோப்பாவில் இந்த அலைகள் வீசுவது இயல்பான ஒன்றாக இருக்கும்போதும், இம்முறை வழக்கத்தை விட அதிகளவு வெப்பத்தை கண்டம் முழுவதையும் பரப்பி இயல்பு வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கும் அளவுக்கு “புயலாக” உருமாறி நுழைந்துள்ளது. ஆம்.! சில காலநிலை நிபுணர்கள் இந்தாண்டு வீசும் அலைகளை “வெப்ப அலை புயல்” (Heat wave storms) என்றே குறிப்பிடுகின்றனர்.

வெப்ப அலையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு!

ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகளில் வெப்பை அலையின் தாக்கமானது ஆயிரக்கணக்கானோரின் உயிரினை பலிவாங்கியுள்ளது. ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். மொத்தமாக சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய 2 அலைகள் வீசி ஓய்ந்த போதிலும், இன்னும் முழுமையாக வெப்ப அலை பாதிப்பு முடியவில்லை என்று வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 2003-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகினர். ஐரோப்பா 1757-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டது

இதையும் படியுங்கள் – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல்! தெலங்கானாவில் களைகட்டிய ஒற்றுமை யாத்ரா!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.