பூமிக்கு அருகில் உள்ள மூன்று சிறுகோள்கள் சூரியனின் ஒளியில் இருந்து மறைந்திருப்பதை அமெரிக்காவை சேர்ந்த NSF-ன் NOIRLab வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். NOIRLab என்பது இரவு நேர ஒளியியல் மற்றும் அகச்சிவப்பு வானியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும்.

இந்த சிறுகோள்களில் ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய “அபாயகரமான” பொருளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த NEA-கள் ( பூமிக்கு அருகில் இருக்கும் சிறுகோள்கள்) பூமி மற்றும் வீனஸின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலிருக்கும் சிறுகோள்களின் கூட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. சூரிய ஒளியின் காரணமாக பூமி மற்றும் வீனஸ் என இரு கோள்களுக்கும் இடையில் இந்த பகுதி குறித்த ஆய்வு மேற்கொள்வது மிகவும் சவாலானது. காரணம் சூரியனின் ஒளி கண்ணை கூசும் இடத்திற்கு அருகில் இருப்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

image
இதுவரை பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 25 சிறுகோள்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுகோள் பூமிக்கும் மற்றும் வீனஸின் சுற்றுபாதைக்கு இடையில் இருப்பதால், பூமியின் வளிமண்டலத்தின் தடிமனான அடுக்குகள் வழியாகவே உற்றுப் பார்க்க முடியும். சூரியன் மறையும் நேரத்தில் தான் கண் கூசும் ஒளி குறைந்து, சிறுகோளை தெளிவாக பார்க்க முடியும். அதுவும் 10 நிமிட நேரத்துக்குள் தான். தாமதமானால் சூரிய ஒளி முற்றிலும் குறைந்து சிறுகோள் மங்கலாக்கி விடும். இத்தனை சவாலான சூழலிலுக்கு இடையில் பூமியை தாக்கக் கூடிய சிறுகோள்ளை குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. 

image

’இதுவரை 1 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அருகில் உள்ள இரண்டு பெரிய சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளோம், அதில் ஒன்றை நாங்கள் கிரக கொலையாளி என்று அழைக்கிறோம். காரணம், 2022 AP7 எனப்படும் 1.5 கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த சிறுகோள் கொண்டுள்ள சுற்றுபாதை , ஒரு நாள் நமது கிரகத்துடன் மோதக்கூடும். 2021 PH7 என்பது சூரியனுக்கு மிக அருகில் அறியப்பட்ட சிறுகோள் மற்றும் LJ4 மற்றும் 2021 PH27 ஆகியவை பூமியின் சுற்றுப்பாதையின் எல்லைக்குள் பாதுகாப்பாக கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்பாதைகளைக் கொண்டு வலம் வருகிறது ’ என NOIRLab-யை சேர்ந்த வானவியாலர்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள் – ‘உங்க கூகுள் பே நம்பர் தாங்க’ – எலான் மஸ்க்கை கிண்டல் செய்த தமிழ் நடிகர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.