கடம்பூர் மலைப் பகுதியில் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு, ஆம்புலென்ஸிலேயே குழந்தை பிறந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மாக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி மைலா (21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மைலாவுக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடம்பூர் மலைப் பகுதியில் இருந்த 108 ஆம்புலன்ஸில் அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் கிட்டாம்பாளையம் வனப்பகுதி சாலையில் வந்தபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி உள்ளார்.

image

இதைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் குமரேசன் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது மைலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மலை கிராம பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வரதராஜன் ஆகியோரை மலை கிராம மக்கள் பாராட்டினர். இருப்பினும் தங்களின் மலை கிராமத்திலும் பிரசவ கால பெண்களுக்கு தேவையான உரிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டால் தங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.