2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலை எவரும் அவ்வளுவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் கொடூர தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புல்வாமா தாக்குதல்

ஆனால், இப்படியொரு சோக சம்பவம் நிகழ்ந்த அந்த வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்த பொறியியல் மாணவன் ஒருவன், புல்வாமா தாக்குதலைக் கொண்டாடும் வகையில் இந்திய ராணுவத்தைக் கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 2019, பிப்ரவரியிலேயே சம்பந்தப்பட்ட மாணவனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவன் கைதுசெய்யப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு தெரிவிதித்தது.

கைது

அதையடுத்து, போலீஸார் நடவடிக்கை எடுத்ததில், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153A (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 124A (தேசத்துரோகம்), 201 (குற்றத்திற்கான ஆதாரங்கள் காணாமல் போனது) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 13 ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கில் மாணவர் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து முன்வைக்கப்பட்ட ஜாமீன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட, மாணவன் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார்.

புல்வாமா தாக்குதலைக் கொண்டாடிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், `உயர்ந்த ஆத்மாக்களின் மரணத்தைக் கொண்டாடிய இவர் இந்தியன் அல்ல’ என்றுகூறி, அந்த மாணவனுக்கு ரூ.10,000 அபராதத்தொகையுடன் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.