வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இஸ்திரி பெட்டி என்றாலே.. மரக்கரி, மின்சாரம் அல்லது சோலார் மூலம் இயங்குவதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் இப்போது சமையல் கேஸ் மூலம் இஸ்திரி பெட்டி பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த பெட்டியை கையாள்வது மிக எளிது என்கின்றனர் சலவை தொழிலாளர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த சலவை தொழிலாளர் இருளாண்டி என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

“நான் இதற்கு முன்னர் மரக்கரி தான் பயன்படுத்தினேன். கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நண்பர் ஒருத்தர் சொன்னார்னு கேஸ் பெட்டிக்கு மாறினேன். இது நல்லா இருக்கு. மொத்தம் 7 கிலோ வெயிட் வரும். அடிப்பாகத்தில் நல்ல கனமான பித்தளை கொடுத்திருக்காங்க. அதனால் லைட்டர் மூலம் பத்த வச்ச கொஞ்ச நேரத்தில் நல்லா சூடாகிடும். நாம தேய்க்கும்போதே துணிய பொறுத்து, சூட்டோட அளவை கூட்டிக்கிடலாம் அல்லது குறைச்சிக்கிடலாம்.”

இருளாண்டி

“மரக்கரி பயன்படுத்திடுகிற பெட்டியை விட இது நல்லா இருக்குமா?”

“நிச்சயமாக மரக்கரி பெட்டி 8 கிலோவில் இருந்து 10 கிலோ வரைக்கும் வெயிட் இருக்கும். அதை பயன்படுத்தி துணி தேய்க்கும் போது உடல் வலி ஏற்படும். இந்த பெட்டி கொஞ்சம் எடை குறைவுங்கிறதால், பெண்களும் எளிதாக தேய்க்கலாம். மரக்கரிக்கு ஆகிற செலவை விட, 70 சதவீதம் இதற்கு குறைவு தான். 5கிலோ சிலிண்டர், 19 கிலோ சிலிண்டர் எது வேண்டுமானாலும் இதற்கு பயன்படுத்திக்கிடலாம். வணிக சிலிண்டர் தான் பயன்படுத்திறதால், சிலிண்டர் காலியாயிடுச்சுன்னா உடனே வாங்கி கிடலாம். அவசரத்திற்கு நம்ம வீட்டில் உள்ள சிலிண்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்”

“தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கரி மூட்டம் போடும் தொழில் முக்கியமானது. ஆனால், நீங்கள் கரி கிடைக்கவில்லைன்னு சொல்றீங்களே?”

“நிலைமை இப்ப மாறிடுச்சு தம்பி. இப்பவும் சிலர் கரிமூட்டம் தொழில் பண்றாங்க. ஆனால், அதிக பேர் பண்ணவில்லை. இதனால், கரிக்கு தட்டுப்பாடு வருது. மரக்கரி விலையும் கூடிடுச்சு. அதுமட்டுமில்லாமல், தேய்க்கிறதுக்கு முன்னாடி தணல் போடனும், அதுக்கு நேரமாகும். புகையால் சுவாசக் கோளாறு ஏற்படும். பெட்டி வேறு வெயிட்டு, அதனால் உடல்வலி ஏற்படும். எல்லா வகையிலும் பார்க்கும்போது கேஸ் இஸ்திரி பெட்டி நமக்கு சௌகரியமாக இருக்குது’ என்றார்.

-அ.ஹரிகர சுதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.