புதுக்கோட்டையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், அரசு நகரப்பேருந்து ஒன்றிற்குள் மழைநீர் வடிந்ததால் அதில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நம்பர் 17 என்ற நகர பேருந்து பெருமாநாடு, குமரமலை, காரையூர் வழயாக மேலத்தானியம் கிராமத்திற்கு புறப்பட்டுள்ளது. பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நல்ல மழை பெய்து தொடங்கியதால் மழை நீர் பேருந்துக்குள் முழுவதும் ஒழுகத் தொடங்கியது. இதனால் அதில் பயணித்த பயணிகள் மேல் தண்ணீர் ஊற்றியதால் அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்றவாறு பயணித்துள்ளனர்.

குடை வைத்திருந்த ஒரு சிலர் மட்டும் குடையை பிடித்தவாறு இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். சம்பந்தப்பட்ட பேருந்து மேல தானியம் கிராமம் செல்லும் வரையில் பேருந்து மேற்கூரையிலிருந்து தண்ணீர் வடிந்தவாறு இருந்ததால் அதில் பயணித்த பயணிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு உள்ளாகினர்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/c2Hhtnr25zU” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

இது குறித்து அதில் பயணித்த பயணிகள் கூறுகையில், “இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் முழுவதுமாக பேருந்துக்குள் வடிவதால் பயணிகள் இது போல் மழை நேரங்களில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஓட்டுனர் இருக்கையில் கூட தண்ணீர் வடியும் அவலம் தொடர்கிறது. இந்த பழைய பேருந்துக்கு பதிலாக மாற்று பேருந்து வேண்டி பல ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் எங்களின் துயரம் தொடர்ந்து வருகிறது. இனியாவது இந்த வழித்தடத்தில் புதிய பேருந்தை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.