மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடனடி மெசேஜிங் சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் விரைவில் பல புது அப்டேட்களை வெளியிட உள்ளது. அவற்றில் மிக முக்கியமான அப்டேட்டாக வாட்ஸ்அப் குழுக்களில் கொண்டுவரப்பட உள்ள மாற்றம் கருதப்படுகிறது.

நண்பர்கள், குடும்பத்தினர் எனப் பலர் இணைந்து குழுவாக கலந்துரையாடும் அனுபவத்தை நமக்கு தரும் இந்த “வாட்ஸ்அப் குழுக்களில்” ஒரு குழுவில் தற்போது அதிகபட்சமாக 512 பயனர்களை மட்டுமே சேர்க்க இயலும் நிலை உள்ளது. அடுத்து வரவுள்ள அப்டேட் மூலம் இனி ஒரு வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சமாக 1024 பேர் வரை சேர்க்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்கான பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு உள்ளது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் வாட்ஸ்அப்பின் போட்டியாளராக கருதப்படும் டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் அதிகபட்சமாக 2 லட்சம் பேர் வரை பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.