“தி.மு.க-வினரை திட்டி மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறீர்கள்… ஆனால் அது ரசிக்கும்படி இல்லை என்கிறார்களே உங்கள் ரசிகர்கள்?”

“பாண்டியராஜன் நடித்த ‘வாய் கொழுப்பு’ படத்தில் வாய்க்குவந்தது எல்லாவற்றையும் துடுக்காகப் பேசிவிடுவார். அந்த மாதிரி தி.மு.க அமைச்சர்கள், தலைவர்கள் துடுக்காகப் பேசுவதும், அது அந்த கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்துவதும் வருத்தமாக இருந்தது. அதனால் அப்படி சொன்னே”

தங்கமணி

`ஓ.பி.எஸ்-க்கு இணை பொதுச்செயலாளர் பதவியளிக்க திட்டமிட்டோம்’ என்று தங்கமணி பேசி இருக்கிறாரே?”

“இது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்”

“ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என அனைவரும் ஒன்றாக சந்திக்கும் நேரம் மிக விரைவில் வரும்’ என்கிற சசிகலாவின் கருத்து குறித்து?”

“இது குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க-வில் உயர்மட்ட குழு போட்டிருக்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளரிடம் எல்லா விஷயங்களையும் ஒப்படைத்துவிட்டோம். இந்த கட்சிக்கு நல்லது-கெட்டது எதுவோ, எல்லாம் அவரே பார்த்து கொள்வார். அவர் பார்த்து ஏதும் முடிவெடுக்கலாம். இதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை”

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

“நீங்கள் சொல்வதை பார்த்தால் முழு அதிகாரம் ஒருவருக்கு கீழ் குவிந்து, ஆலோசனை கூட சொல்ல முடியாத நிலையில் அ.தி.மு.க இருப்பது போல் தெரிகிறதா?”

“அப்படி எல்லாம் ஏதும் இல்லை. ஆலோசனை சொல்லும் இடத்தில் சொல்வோம். எடப்பாடியாரே கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். கட்சியில் எல்லோரும் இப்போது திருப்தியாக தான் இருக்கிறோம்”

ஸ்டாலின்

“அதிகாரிகளை தி.மு.க அரசு சரியாக கையாள்வதில்லை என்கிற விமர்சனத்தை முன்வைத்தீர்கள். ஆனால், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் அரசு இயங்குவதாக ஒரு தரப்பு சொல்கிறார்களே?”

“அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா, இல்லையா என்பது விஷமில்லை. ஆனால், சில திட்டங்கள் நிறைவேற்றுவதில் ஓட்டை இருக்கிறதல்லவா. அந்த ஓட்டைக்கு காரணம் என்ன என்றுதான் கேட்கிறோம். அதற்காக நல்ல அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும் என்கிறோம். பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்றாலும் கூட ஒரு முதலமைச்சர் சொன்னால் செயல்படுத்தியாகணும். அதற்கான நிதி பெறுவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் அதற்கான முன்னெடுப்பு ஏதும் எடுத்ததாக தெரியவில்லை. இன்னொன்று யார் அதிகாரிகளை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் ஒரு மாயையாக இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நிர்வாக திறன் இல்லாத முதல்வராக இன்று ஸ்டாலின் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது”

பசும்பொன் குருபூஜை – தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

“தேவர் குரு பூஜைக்கான தங்க கவசம் பெற போவது யார் என்கிற குழப்பம் எழுந்திருக்கிறதே?”

“அதில் எந்த குழப்பமும் இல்லை. இதற்கான உரிமை அ.தி.மு.க-விற்குதான் இருக்கிறது. அதன்படி எங்களின் அதிகாரபூர்வ பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை, வங்கியிலிருந்து அழைத்தார்கள். நாங்கள் உரிய முறையில் கையெழுத்து போட்டு பின்பற்றி கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் அ.தி.மு.க தலைமை கழகத்திற்கான சம்பளம் கொடுப்பது, பணம் எடுப்பது, கணக்கு வைப்பது என ஆர்.பி.ஐ விதி பிரகாரம் அவருக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு ஒரே விதிதான். அதனால் தேவர் குரு பூஜைக்கான தங்க கவசம் பெறுவதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை”

கர்நாடக மாநிலத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி

“ராகுல் காந்தியின் பயணம் மாற்றத்தை உருவாக்குமா?”

“ராகுல்காந்திக்கு நிச்சயமாக பயனளித்திருக்கிறது. ஒரு இளம் தலைவர் இந்தியா முழுவதும் அறியப்படுவதற்கான வாய்ப்பாக இருக்கிறது. ஆனால், அந்த கட்சிக்கு வலு சேர்க்குமா என்பது முடியும் போதுதான் தெரியும்”

சீமான்

“’ஒரு கோடி வாக்குகள் இலக்கு’ என்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சீமான் களம் இறங்குகிறார். ‘ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அ.தி.மு.க’ என்று சொல்லும் உங்களுக்கு இது பின்னடைவாகுமா?”

“ஒரு ஜனநாயக பூமியில் அவர் கட்சி வளர்க்க என்ன வேண்டுமானாலும் பேசலாம். எந்த ஒரு இயக்கத்தினரும் தன்னை முதல்வர் வேட்பாளர் என்று தன் முன்னிறுத்துவார்கள். அந்த அடிப்படையில் அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஆர்வப்படுத்தவும் சொல்லி இருப்பார். அவர் எண்ணம் ஈடேறுமா என்பதை எல்லோரும் பார்க்கத்தானே போகிறோம். அதற்கு தம்பிக்கு ஒரு வாழ்த்து”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.