மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் கிருஸ்டோபர் மனைவி பெலுசியா கடந்த 4-ஆம் தேதி வீட்டிலேயே பிரசவித்ததால், தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து விளைவிக்;கும் வகையில் செயல்பட்டதாக ஜான் கிருஸ்டோபர், அவருக்கு உதவிய இயற்கை நலம் தன்னார்வ தொண்டு நிறுவனர் ஆகியோர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது, ”மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுகாதார வட்டம் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட எருக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜான் கிருஸ்டோபர் என்பவரின் மனைவி பெலுசியா என்பவர் 04.10.2022 அன்று நண்பகல் 02.10 மணியளவில் தனது வீட்டிலேயே தனது இரண்டாவது குழந்தையான ஆண்குழந்தையை எவ்வித மருத்துவத்துறை மேற்பார்வை மற்றும் உதவியின்றி தனது கணவர் மூலமாக பெற்றெடுத்து உள்ளார். பிரசவம் பார்ப்பதில் பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

image
இதன் காரணமாக தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜான் கிருஸ்டோபர் மீதும் அவருக்கு உதவிய இயற்கை நலம் தன்னார்வ தொண்டு நிறுவனர் மீதும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுபோன்ற இயற்கை ஆர்வலர்கள் என்ற பெயரில் மருத்துவமனை அல்லது பிரசவம் பயிற்சி பெற்ற நபர்கள் உதவி இல்லாமல் பிரசவம் பார்ப்பது தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால் அத்தகைய செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.