சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 801 புள்ளிகளை பெற்று மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ICC T20 rankings: Can Suryakumar Yadav dethrone Babar Azam as top batter?

டி20 தரவரிசை பட்டியலில் 861 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 13ஆவது இடத்திலும், விராட் கோலி 15 ஆவது இடத்திலும், கேஎல் ராகுல் 22 ஆவது இடத்திலும் உள்ளனர்.

அதே நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸ்ஸி வான் டெர் டுசென் 2வது இடத்திலும் குயிண்டன் டி காக் 3வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

ICC T20 Rankings: Mohammad Rizwan dethrones Babar Azam to become NEW World  No 1, SKY falters in race, Check OUT

இந்நிலையில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்மன்பிரீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன்மூலம் அவர் 9ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 6ஆவது இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.