அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து 6 பேரின் உயிரை அமேசானின் அலெக்ஸா கருவி காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 4 பெரியவர்கள், 2 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்தது. நள்ளிரவில் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, இரவு 2 மணியளவில் வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டை சூழ்ந்து எரிந்து கொண்டிருந்த தீ காரணமாக வீட்டிற்குள்ளும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த புகைமூட்டம் பரவத் துவங்கும்போது இதை அவர்கள் வீட்டில் இருந்த அமேசானின் குரல் சேவையான “அலெக்ஸா” (Alexa) உணர்ந்துள்ளது. உடனடியாக ஒலியெழுப்பி வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்கும் விதத்தில் சத்தமாக எச்சரிக்கை விடுக்க துவங்கியிருக்கிறது அலெக்ஸா. தூக்கத்தில் இருந்து எழுந்த குடும்பத்தினர் சூழ்ந்திருந்த புகை மண்டலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Amazon Alexa credited with saving lives after alerting family to house fire

வீட்டைச் சூழ்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் குடும்பத்தின் கேரேஜ் வழியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அந்நகர தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ட்விட்டரில் அலெக்ஸா மூலம் இக்குடும்பம் காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளனர். உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறுவது சிரமமாக மாறியிருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


ஆறு பேர் உயிரை அலெக்ஸா காப்பாற்றிய போதும், அவர்கள் வசித்து வந்த வீடு தீக்கிரையாகி விட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மொத்த சேதம் 175,000 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று தோராயமாக மதிப்பிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூபாய் 1.40 கோடியாம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.