ஆசியகோப்பையின் இறுதிப்போட்டியில் வெல்ல சிஎஸ்கே ஊக்கமளித்தது என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.

டாஸ் தோற்று பேட்டிங்க் செய்ய பாகிஸ்தான் அழைத்தது கடினமானதாக இருந்தாலும் எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்ததாக தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.

ஆசிய கண்டங்களில் இருக்கும் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறும் இந்த ஆண்டிற்கான ஆசியகோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தொடங்கி செம்படம்பர் 11 வரை நடைபெற்றது. இந்நிலையில் தொடரின் லீக் சுற்றுகள் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

image

ஆசியகோப்பையின் விறுவிறுப்பான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிபோட்டியில் டாஸ் வெல்லும் அணியே கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் தொடங்கப்பட்ட போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அற்புதமாக பந்து வீசிய பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி 9 ஓவர்கள் முடிவில் 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு ஆடிய பனுகா ராஜபக்சே மற்றும் வனிந்து ஹசரங்கா இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு 171 என்ற திடமான இலக்கை நிர்ணயித்தனர்.

image

பின்னர் தொடங்கப்பட்ட இரண்டாவது இன்னிங்க்ஸில் அற்புதமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்க் என வெளிப்படுத்திய இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக் வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய வனிந்து ஹசரங்கா(3 விக்கெட்டுகள்) மற்றும் ப்ரமோத் மதுஷன் (4 விக்கெட்டுகள்) இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதிப்பொட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி ஆசியகோப்பையில் தனது 6வது கோப்பையை வென்று அசத்தியது.

image

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாங்கள் 2021ல் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை நினைவில் வைத்திருந்தோம். இறுதிபோட்டியில் டாஸ் தோற்று முதல் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ” ஐபிஎல் 2021 இல், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து மேட்ச் வென்றது, அதுதான் என் மனதில் இருந்தது. எங்கள் இளம் வீரர்களுக்கு நிலைமைகள் நன்றாகத் தெரியும். ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு வனிந்து விளையாடிய விதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாமிகாவும், டி சில்வாவும் நன்றாக பேட்டிங் செய்தனர். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தது திருப்புமுனையாக இருந்தது. ஏனெனில் 170 என்பது மனதளவில் பெரிய வித்தியாசத்தை தரகூடிய இலக்கு. 160 எப்போதும் துரத்தக்கூடிய ஒரு இலக்காக இருந்திருக்கும்.

மதுஷங்கா விக்கெட் எடுக்காதது குறித்து கேட்டதற்கு, ஒரு இளம் வீரராக மதுஷங்கா சிறப்பாக பந்துவீசுவார் என்பதை நாங்கள் நம்புகிறோம், மேலும் ஒரு கேப்டனாக நான் அவரை ஆதரிக்க வேண்டும்” என்று தசுன் ஷனகா கூறினார்.

image

ஐபிஎல் 2021 தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் விளையாடப்பட்டது. மேலும் இந்த ஆடுகளங்களில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் தான் இந்தியாவின் முதன்மையான டி20 போட்டியிலும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.