டி20 உலககோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என மூன்று தொடர்களுக்கான இந்திய அணி பட்டியலை வெளியிட்டுள்ளது இந்திய பிசிசிஐ.

டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி ஆசியகோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில் எந்தவிதமான பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. பும்ரா மூன்று டி20 தொடர்களுக்கும் திரும்பி உள்ளார். மேலும் துணை வீரர்களாக மொஹமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னாய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

image

டி20 உலககோப்பைக்கான அணி வீரர்கள்: ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் கூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவி அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஸ்தீப் சிங்.

ஸ்டேண்ட் பை வீரர்கள் : மொஹமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஸ்னாய், தீபக் சாஹர்.

image

ஆஸ்திரேலியா உடனான டி20 தொடரில் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மொஹமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா உடனான டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியல், ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் கூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவி அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஷ் குமார், ஹர்ஷல் பட்டேல், மொஹமது ஷமி, தீபக் சாஹர்.

image

தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனெஷ் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடர் வீரர்கள் பட்டியல், ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் கூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், பும்ரா, ஹர்ஷல் பட்டேல், மொஹமது ஷமி, அர்ஸ்தீப் சிங், தீபக் சாஹர்.

மேலும் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது கண்டிஷனிங் தொடர்பான விஷயங்களுக்கு NCA க்கு அனுப்பப்படவுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.