‘மகாராணியை காண உன்னுடைய மனைவி மேகன் மார்க்கல் வரக்கூடாது’ என தனது மகனுக்கு மன்னர் சார்லஸ் உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 96 வயதில் காலமானார். ராணி எலிசபெத்துக்குப் பிறகு அரச பதவியை 73 வயதான அவரின் மூத்த மகன் சார்லஸ் ஏற்றுள்ளார்.

இச்சூழலில் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நேரத்தில், ‘மகாராணியை காண உன்னுடைய மனைவி மேகன் மார்க்கல் வரக்கூடாது’ என தனது மகன் ஹாரிக்கு (தற்போதைய இளவரசர்) இளவரசர் சார்லஸ் (தற்போதைய மன்னர் ) உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

image

மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பால்மோரல் மாளிகைக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாகத்தான் அங்கு சென்றுள்ளார். அதேபோல, அங்கிருந்து முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியச் சென்றதும் ஹாரிதான். இதன் மூலம், அவர் அரச குடும்பத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவாகிறது.

அதேபோல் ஹாரியும் அவரது மனைவியும் எந்தவொரு நிகழ்வையும்  தன் குடும்பத்தினர் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை என்றும் எல்லாம் செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிடும் அறிக்கை அல்லது சமூக வலைத்தளம் வாயிலாக வெளியாகும் பதிவுகள் மூலமாகவே அறிந்துகொள்ளப்படுகிறது என்ற ஆதங்கமும் மன்னர் சார்லஸ்க்கு இருக்கிறது .

image

இப்போதும் அதேபோல, குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமலே, தாங்கள் மகாராணியாரைக் காண்பதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகைக்கு செல்வதாக தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிவித்தனர் ஹாரியும் மேகனும். ஆனால், ஹாரியை தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ், மகாராணியாரைக் காண மேகனை அழைத்து வரவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியதாக
அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இறுதி சடங்குக்கு ரூ.55 ஆயிரம் கோடி! நாணயங்களை மாற்ற ரூ.1 லட்சம் கோடி! எலிசபெத் செலவுகணக்கு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.