மேடையேறிய த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்!

இந்த அரங்கத்தைப் பார்க்கும்போது என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது. கமல் சார் ரஜினி சார் போன்றோரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். என் கனவை நினைவாக்கிய மணி சாருக்கு மிக்க நன்றி.” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் த்ரிஷா

`நமஸ்தே நமஸ்காரம் எல்லாருக்கும் வணக்கம்!’ என்று பேசத் தொடங்கிய ஐஸ்வர்யா ராய். எனக்கு இங்க வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எப்போதும் என்னோட குரு மணி சார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விழா மேடையில் ஷங்கர்

“Pan India – ங்கிற வார்த்தைய இன்னைக்கு எல்லாரும் யூஸ் பண்றாங்க. ஆனா,உண்மையான பான் இந்தியா இயக்குனர் மணிசார் தான். மணிரத்னத்தின் கீதாஞ்சலி படத்தின் `ஓ ப்ரியா ப்ரியா’ பாடல் மற்றும் தளபதி பாடல்கள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். அவைதான் எனக்கான இன்ஸ்பிரேஷனாக இருந்தன. நேத்துதான் இந்தியன் -2 முதல் ஷெடியூல் முடிச்சோம்.” – என நெகிழ்ந்து பேசினார் இயக்குநர் ஷங்கர்

வெளியானது பாடல்கள்:

`பொன்னி நதி’ பாடல் பாடி முடித்து பம்பா பாக்யாவை நினைவு கூர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த யுவன்

ஆடியோ வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கலந்துகொண்டனர்

நான் கேமராமேன் இல்ல, மணி ரத்னம் ரசிகர் -ரவிவர்மன் நெகிழ்ச்சி 

மணிரத்னம் போல் நடித்துக் காட்டி அரங்கத்தையே சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தினார், நடிகர் ஜெயராம்.

“தொழில்நுட்ப கலைஞர்களான மணிரத்ன சோழன், ரகுமான் தேவன் இருவருக்கும் பாராட்டுக்கள்!”- பார்த்திபன்.

5 மொழிகளில் வணக்கத்தைக் கூறி உரையைத்  தொடங்கிய பார்த்திபன், “ரத்ன சுருக்கமா யார் வேணாலும் பேசலாம், ஆனா மணிரத்னம் மாதிரி சுருக்கமா யாராலயும் பேசமுடியாது!”

 ரஜினி – கமல் இருவரும் வருகை தந்து கட்டியனைத்து விசாரித்து கொண்டார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னத்தின் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி.

PS1 Trailer and Audio Launch

‘பொன்னியின் செல்வன்-1’ ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் மணி ரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் விதமாக இதுவரை அவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களைப் பாடி வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன்’ டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா!

Link- https://bit.ly/VikatanDiscord

லைவ் அப்டேட்ஸுக்கு விகடனின் Discord சர்வரில் இணைந்திடுங்கள்!

Vikatan Discord

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.