பரம்பிக்குளம்- ஆழியாறு ​​திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி, திருப்பூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் கைவிடப்படவில்லை என ​தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே​.​என்​.​நேரு ​தெரிவித்துள்ளார்.

பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம்

​திண்டுக்கல் மாவட்ட ​கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை, அமைச்சர் கே​.​என்​.​நேரு தலைமையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான,​ ​மண்டல அளவிலான நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது​.​ ​இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எம்எல்ஏக்கள் செந்தில்குமார், காந்திராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்​கூட்டத்திற்கு பின் ​செய்தியாளர்களை சந்தித்த ​அமைச்சர் கே.என்.நேரு​, ”தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு 162.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்டம் 68 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளது.

போடி நகராட்சி 76.15 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் இம்மாதம் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 30 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. தென்கரை பேரூராட்சிக்கு குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. ​திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு 46.31 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு 9.62 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கே.என்.நேரு

​ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீருக்காக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ​​​​பொதுப்பணித்துறை அமைச்சர் ​விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை ​ ​நடத்தி வருகிறார்.

விவசாயிகளிடம் பேசி சமாதானப்படுத்தி தண்ணீர் எடுக்கப்படும். அவர்களது முக்கியமான கோரிக்கை கேரளாவில் இருந்து வரக்கூடிய தண்ணீரை பெற்றுத் தந்து விட்டு எடுத்துக் கொள்ளலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கே.என்.நேரு

​இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் எதுவும் செய்ய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை அணையில் இருந்து நேரடியாக திண்டுக்கல் நகருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்காக 543 கோடி ​ரூபாய் ​செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நத்தம் தாடிக்கொம்பு வடமதுரை எரியோடு அரியலூர் மற்றும் பாளையம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மேம்படுத்த 133 கோடி ​ரூபாய் ​மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது”​ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.