ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்றிருப்பார் என்று விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்.

தொண்டர்களை நம்பி அதிமுக தொடங்கப்பட்டதே தவிர, தலைவர்களை நம்பியோ சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ தொடங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து, வீரர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. அதிமுகவை தொண்டர்களை நம்பித்தான் தலைவர் எம்ஜிஆர் தொடங்கினார் என்றார்.

தொடர்ந்து பன்னீர்செல்வம் பற்றி பேசிய அவர், பன்னீர்செல்வம் உத்தமன் போல பேசும் மகா நடிகர் என்றும், அவர் நடிகராக இருந்திருந்தால் ரஜினி சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார் என்றும் விமர்சித்தார். நடைபெற்று முடிந்த பொதுதேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர் செல்வம் செயல்பட்டதாக விமர்சித்தார்.

image

மேலும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வத்துக்கு, அதிமுகவில் என்றுமே இடம் கிடையாது என்ற அவர், கரந்த பால் மடியேறாது என்றும், கருவாடு மீனாகாது என்றும் கூறினார். தொடர்ந்து பன்னீர் செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் எதுவும் அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் மற்றும் பன்னீர் மேற்கொள்வது மிரட்சி பயணம் என்றும் விமர்சித்தார்.

image

ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு என்று கூறிய ஜெயக்குமார், ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளிக்காத்து ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.