கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது என வங்கி முகவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. இவர்கள், கடன் பெற்றவர்களை மனரீதியாக துன்புறுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கடன் வசூல் முகவர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

image

அதன்படி, கடன் பெற்ற வாடிக்கையாளரை பொதுவெளியில் அவமானம் அல்லது இழிவுபடுத்தும் உரிமை கடன் வசூல் முகவர்களுக்கு இல்லை என்றும், கடன் வசூல் தொடர்பாக வாடிக்கையாளரை காலை 8 மணிக்கு முன்போ அல்லது இரவு 7 மணிக்கு பின்போ அழைத்து பேசக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடனாளரின் குடும்பத்தார், நண்பர்களிடம் அத்துமீறி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் முகவர்கள் ஈடுபடக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.