எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலை சற்று உயர்ந்து ரூ. 682.35 என்ற விலையில் விற்கப்படுகிறது. இருப்பினும் அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 28 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகளில் கடுமையாகச் சரிவு ஏற்பட்டதால் எல்.ஐ.சி பங்கு வெளியீடு தள்ளிப்போனது. இருப்பினும் எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு (IPO) மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

LIC shares are falling daily since IPO, experts gave this advice to  investors - Hot News Updates

எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினர். அந்நிய முதலீட்டாளர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு யாரும் ஆர்வம் செலுத்தவில்லை. எல்ஐசி பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

LIC Share Price, LIC Share Price Today Live, LIC Share Price Target, LIC  Share Price NSE, LIC Share News | Markets News – India TV

ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளிலேயே சரிவை சந்தித்தது. தொடர்ந்து சரிந்து வந்த எல்ஐசி பங்கின் விலை ஜூன் மாத துவக்கத்தில் 708 ரூபாய் என்ற அளவு வரை குறைந்தது. இதனால் எல்ஐசி பங்குகளை ஆர்வத்துடன் வாங்கிய முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். ஜுன் மாதம் இறுதியில் நிதியாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்தபோது எல்ஐசியின் பங்கின் விலை ரூ. 661 ஆக சரிந்தது. அறிமுகமான விலையான ரூ.949 உடன் ஒப்பிட்டால் 2 மாதங்களை நிறைவு செய்வதற்குள் 30 சதவீத சரிவை சந்தித்தது எல்ஐசி.

LIC share down over 10% from IPO price: Buy, sell, hold -- what should you  do now? | Companies News | Zee News

LIC 2.0 என்று மிகப்பெரிய பில்டப்புடன் அறிமுகமானது எல்ஐசி ஐபிஓ. பட்டியலிடப்படும்போது எல்ஐசியின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.4.8 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. பங்குச் சந்தையில் அடியெடித்து வைத்து ரூ.1.2 லட்சம் கோடியை இழந்து இருக்கிறது எல்.ஐ.சி. இதையடுத்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பங்குச்சந்தை மந்தமாக நகர்ந்த நிலையில், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலை சற்று உயர்ந்து ரூ. 682.35 என்ற விலையில் விற்கப்படுகிறது. இருப்பினும் அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 28 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது.

LIC IPO Review 2022 – IPO Dates, Price Band, GMP and Other Details!

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்.ஐ.சி நிறுவனம் 603 கோடி ரூபாய் நிகரலாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 24 சதவிகிதம் அதிகம். இந்நிலையில், நிதிநிலை அறிக்கை சாதகமாக உள்ளதால் எல்.ஐ.சி பங்கு விலை சரிவிலிருந்து மீள வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.