மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கவும், அதிகமாக லைக்குகள் வாங்கவும் தடை விதிக்கப்பட்ட செயல்களை செய்து இணையவாசிகள் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு.

Aeroplane

பாபி கட்டாரியா என அழைக்கப்படும் பல்விந்தர் கட்டாரியா, சமூக வலைதளத்தில் பிரபலமானவர். குறிப்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தவர்.

இந்நிலையில், இவர் விமானத்தில் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ பகிரப்பட்ட உடனே பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல், பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, இந்த வீடியோவை குறிப்பிட்டு `இதுபோன்ற ஆபத்தை சகித்துக் கொள்ள முடியாது’ என்று கூறினார்.

இந்த விஷயத்தை அறிந்த சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவிக்கையில், ‘இந்தாண்டு கட்டாரியா ஜனவரி 23-ம் தேதி துபாயில் இருந்து டெல்லி சென்றார். அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ. இது பழைய வீடியோ. தற்போது அவருடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ இல்லை. மேலும் இது குறித்து முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.