அமைதியான முறையில் தைவானை இணைக்கவே விரும்புகிறோம். ஆனால் அதே வேளையில் தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.

தைவான் விவகாரம் மீண்டும் உலக அரங்கில் சூடுபிடித்துள்ள நிலையில் அது குறித்து சீனா தனது நிலைப்பாடு குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தைவானை அமைதியான முறையில் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளவே விரும்புவதாகவும் ஆனால் தேவைப்பட்டால் படைபலத்தை பிரயோகித்து அதை தம் வசப்படுத்த தயங்கமாட்டோம் என்றும் சீனா கூறியுள்ளது.

INOMUN -What's behind the China-Taiwan divide?

தைவான் விவகாரத்தில் வெளிநாடுகள் தேவையின்றி தலையிடுவதாகவும் வெள்ளை அறிக்கையில் அமெரிக்காவை சீனா மறைமுகமாக கண்டித்துள்ளது. தைவானை சுற்றிலும் சீன படைகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

US should act as mediator in China-Taiwan Conflict – Valley Ventana

அதே வேளையில் “சீனா தைவான் மீது படையெடுத்தால் அதனை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு தைவானை பாதுகாக்கும். இதனால் பயங்கர விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.