தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்யும் ரயில்வே டிடிஇ-களுக்கு மொபைல் டேப்லெட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், 185 எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள டிடிஇ-களுக்கு, சுமார் 800 டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இனி பயணிகள் சார்ட் மற்றும் மீதமுள்ள படுக்கை விவரங்கள் யாவும் ஆன்லைனில் அவர்களுக்கு கிடைக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களாக நடந்து வந்த `டிடிஇ-களுக்கு டேப்லெட் விநியோகிக்கும் பணி’, இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இந்த டேப்லெட்ஸ் யாவும், பயணிகள் முன்பதிவு அட்டவணையை டிடிஇ-க்களுக்கு அவர்களின் கைகளுக்குள் கொண்டு வந்துவிடும். இப்படி எல்லாமே கைகளில் உடனுக்குடன் கிடைப்பதால் காலி படுக்கைகளை வேறொருவருக்கு அலெர்ட் செய்வது, உணவு டெலிவரிக்கு ஆர்டர் செய்வோர் – படுக்கை விரிப்புக்கு ஆர்டர் செய்வோர் பற்றிய விவரங்களிலும் வெளிப்படத்தன்மை இருக்குமென கூறப்பட்டுள்ளது.

image

ரயில் பயணத்தின்போது சிக்னல் பிரச்னைகளும் இருக்கலாம் என்பதால், ஆஃப்லைனிலும் டிடிஇ-க்கள் பயணிகள் அட்டவணையை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல டிக்கெட்டை ரத்து செய்வோர் பட்டியலும் ஒரு மணி நேர இடைவெளிக்குள் டிடிஇ-யின் டேப்லெட்டுக்கு இணைய வழியில் அப்டேட் ஆகி தகவல் கிடைத்துவிடும் என்பதால், போலி அடையாளத்துடன் பயணிப்போரை தடுக்க முடியுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 2018-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இவ்வளவு வருடங்களாக சோதனை முயற்சியாக சென்னை டூ மைசூருக்கான சென்னை சப்தபதி ரயிலிலும்; சென்னை டூ கோவைக்கான சென்னை சப்தபதி விரைவு ரயிலிலும் பின்பற்றப்பட்டு வந்தது. அது வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து, தற்போது மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல விரைவு ரயில்களிலும் அதிவிரைவு ரயில்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.