குழந்தை இல்லாத தம்பதி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் 7 வயது மாணவியை கடத்திக் கொண்டு போய் தன்னுடன் வளர்த்துவிட்டு, தனக்கு குழந்தை பிறந்ததும், கடத்தி வந்த சிறுமியை மீண்டும் தெருவில் விட்டிருக்கும் சம்பவம் மும்பையில் அரங்கேறியிருக்கிறது.

அந்தேரியின் கில்பெர்ட் ஹில் பகுதியில் உள்ள முனிசிபல் பள்ளியில் பூஜா என்ற 7 வயது சிறுமி படித்து வந்தார். சரியாக 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி தாத்தா பாட்டி தனக்கு கொடுத்த பாக்கெட் மணி குறித்து அண்ணன் ரோஹித் இடையே சண்டை வந்திருக்கிறது. இதில் கோபித்துக் கொண்ட பூஜா பள்ளிக்கு வெளியேவே நின்றிருக்கிறார். அப்போது அவ்வழியே சென்ற ஹாரி டி’சோசா என்ற நபர் ஒருவர் சிறுமியை கண்டதும் அவருக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

image

வீட்டுக்குச் சென்றதும் மனைவி சோனியிடம் விஷயத்தை தெரிவிக்க இருவரும் அச்சிறுமியை வளர்க்க பிரயத்தனம் ஆகியிருக்கிறார்கள். மறுநாள் சிறுமி காணாமல் போனது பற்றி செய்தித்தாள், நியூஸ் சேனல்கள் மூலம் பரவத் தொடங்கியதால் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு அந்த தம்பதி சிறுமியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

அங்கு, சிறுமி பூஜாவை ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்திருக்கிறார்கள். இதனையடுத்ஹு டி’சோசா சோனி தம்பதிக்கு குழந்தை பிறந்ததால் , கடத்திக் கொண்டு வந்து வளர்த்து வந்த சிறிமி பூஜாவை மீண்டும் அந்தேரி பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் சென்றதோடு, அந்த தம்பதி சிறுமி பூஜாவை வீட்டு வேலை செய்யவும் வைத்திருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் டி’சோசா தம்பதி வசித்து வந்த ஜுஹு கள்ளி பகுதியில் உள்ள வீட்டில்தான் பூஜா வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது அவருடன் இருந்த பெண்ணிடம் தனக்கு நடந்த கொடுமைகளை பூஜா தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து பூஜாவின் நிலை குறித்து அறைந்த ப்ரமிளா தேவேந்திரா என்ற பெண் கூகுள் மூலம் காணாமல் போன பூஜா பற்றிய செய்திகளை தேடியிருக்கிறார்.

image

அதன் மூலம் கிடைக்கப்பட்ட 4 போஸ்டர்களில் ஒருவர் பூஜாவின் பக்கத்து வீட்டில் இருந்த முகமது ரஃபீக்கை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அதன் பிறகு வீடியோ கால் மூலம் பூஜாவுடன் அவரது தாயார் பேசியதை அடுத்து போலீசிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பின்னர் பெற்றோருடன் பூஜா இணைந்ததை அடுத்து, சிறுமியை கடத்தியதற்காக 50 வயதாகும் டி’சோசாவை கைது செய்த அந்தேரி போலீசார், அவரது மனைவி சோனி மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மேற்கு அந்தேரியில் வசித்து வந்த பூஜாவின் தாயார் வீடு வெறும் 500 மீட்டர் தொலைவில்தான் இருந்திருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயாருடன் பூஜா இணைந்திருந்தாலும், தன்னுடைய அப்பா மற்றும் தாத்தா தற்போது உயிரோடு இல்லை என்பதை அறிந்து அவர் மிகவும் கவலையுற்றிருக்கிறார் என டி.என்.நகர் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

image

இதனிடையே 2008 முதல் 2015 வரையில் மகராஷ்டிராவில் 166 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த கடத்தல் வழக்கை கையாண்ட துணை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர போஸ்லே 166ல் 165 பேரை கண்டறிந்து அவர்களது பெற்றோரிடம் சேர்த்தார்.

166வது சிறுமியாக இருந்த பூஜாவை கண்டுபிடிக்க ராஜேந்திர போஸ்லே தன்னுடைய ஓய்வு காலத்துக்கு பிறகு தொடர்ந்து தேடி வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.