இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கிறது.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணியில் ஓய்வளிக்கப்பட்ட முன்னணி வீரர்களான ரிஷப் பண்ட், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிறங்க உள்ளனர். தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். விராட் கோலிக்கு இந்த தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

image

வெஸ்ட் இண்டீஸ் அணி நிகோலஸ் பூரன் தலைமையில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரிலும் இந்திய அணி அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குவதால் ஆட்டத்தில் இன்று அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

இந்தியா: 1.ரோகித் சர்மா (கேப்டன்), 2.ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), 3.தீபக் ஹூடா / ஷ்ரேயாஸ் ஐயர், 4.சூர்யகுமார் யாதவ், 5.ஹர்திக் பாண்டியா, 6.தினேஷ் கார்த்திக், 7.ரவீந்திர ஜடேஜா, 8.ஹர்ஷல் படேல், 9.ஆர் அஸ்வின்/ குல்தீப் யாதவ், 10.புவனேஷ்வர் குமார், 11.அவேஷ் கான்/அர்ஷ்தீப் சிங்

வெஸ்ட் இண்டீஸ்: 1.கைல் மேயர்ஸ், 2.பிராண்டன் கிங், 3.நிக்கோலஸ் பூரன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 4.ஷிம்ரோன் ஹெட்மியர், 5.ரோவ்மேன் பவல், 6.ஜேசன் ஹோல்டர், 7.ஒடியன் ஸ்மித்/டொமினிக் டிரேக்ஸ்/ரொமாரியோ ஷெப்பர்ட், 8.அல்ஜாரி ஜோசப், 9.அகேல் ஹோசின், 10.ஓபேட் மெக்காய், 11.ஹைடன் வால்ஷ் ஜூனியர்

இதையும் படிக்க: கண்ணைக்கட்டிக் கொண்டே அரங்கை அதிரவைத்த லிடியன்! துவக்க விழா ஒரு ரீவைண்ட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.