நெருப்புடன் விளையாடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமையன்று (ஜூலை 29) சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசியில் சுமார் 2 மணி நேரம் பேசினார். தைவானை சொந்தம் கொண்டாடும் விஷயத்தில் விலகியிருக்குமாறு அப்போது ஷி ஜின்பிங்கிடம் பைடன் தெரிவித்ததாகவும் அதற்கு நெருப்புடன் விளையாடாதீர்கள், அது சுட்டெரித்து விடும் என்று சீன அதிபர் ஆவேசமாக எச்சரித்ததாகவும் சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

China's Xi warns Biden not to 'play with fire' over Taiwan | Inquirer News

தைவான் தொடர்பாக கடந்த நவம்பரில் இருவரும் பேசியபோதும், பைடனை சீன அதிபர் எச்சரித்த நிலையில், மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானின் சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் அந்நிய சக்திகளின் தலையீட்டை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

Why China sent a record number of fighter jets and nuclear-capable bombers  into Taiwan's identification zone - ABC News

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.