சீனா இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டி முடிக்கும் போது, உலகின் தனி விண்வெளி நிலையத்தை வைத்துள்ள நாடு என்ற பெருமையை பெறும். 

சீனா புதியதாக நிர்மாணித்து வரும் விண்வெளி மையத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வுக் கூடத்தில் சீன விஞ்ஞானிகள் தங்கள் பணியை தொடங்கினர். விண்வெளியில் ஆய்வுகளை செய்வதற்காக டியாங்காங் என்ற புதிய விண்வெளி நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. அப்பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

China has successfully launched the 2nd module of Tiangong Space Station!

17.9 மீட்டர் உயரமும் 4.2 மீட்டர் விட்டமும் 23 டன் எடையும் கொண்ட வென்டியான் என்ற பிரமாண்ட ஆய்வுக் கலனுக்குள் ஆராய்ச்சி சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு செய்வதற்கென இக்கலனில் தனி பகுதியும் உள்ளது. இந்த ஆய்வுக் கலனுடன் ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. ஏவப்பட்ட 495ஆவது விநாடியில் ஆய்வக தொகுப்பு ராக்கெட்டிலிருந்து பிரிந்து விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

Chinese spacecraft successfully docks with space station, astronauts enter  lab module | World News | Zee News

இதன் பின் அந்த ஆய்வுக் கூடம் விண்வெளி மையத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது. அதற்குள் விஞ்ஞானிகள் நுழைந்து பார்வையிட்டு பின்னர் பணிகளை தொடங்கினர். விண்வெளியில் உயிரினங்கள் வளர்ச்சி குறித்து இந்த ஆய்வுக் கூடத்திலிருந்து ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது.

சீனா இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டி முடிக்கும் போது, உலகின் தனி விண்வெளி நிலையத்தை வைத்துள்ள நாடு என்ற பெருமையை பெறும். ரஷ்யாவின் “சர்வதேச விண்வெளி நிலையம்” பல நாடுகளின் கூட்டுத் திட்டமாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.