5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கிய நிலையில் 5ஜி தொழில்நுட்பம் என்றால் என்ன அதன் சிறப்பம்சங்கள் என்ன ? பார்க்கலாம்..

பொழுது விடிவது முதல் சாய்வது வரை இணையம் 60% இந்தியர்களுக்கு வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்ட நிலையில், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீட்டுக்கான ஏலம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. 5ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் 4ஜியை விட 10 மடங்கு வேகமாகவும், 3ஜியை விட 30 மடங்கு வேகமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

5G ஏலத்தில் 72 GHz ஸ்பெக்ட்ரம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 4G வேகம் சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகப்பட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறப்படுகிறது.

image

இன்றைய ஏலத்தில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோnடாஃபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை கொண்டிருக்கும்.

ஏலம் ஜூலை இறுதிக்குள் முடிவடையும் என்றும், இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் 23 பில்லியன் டாலர் மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தொழில்நுட்பத்தின் புதிய சரித்திரத்தை இந்தியா தொடங்க உள்ளது.

image

முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் ஆகியவை தங்கள் சந்தைப் பங்கை உயர்த்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு நிறுவனங்களும் மொத்தம் 2.68 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈர்ப்பு பண வைப்புத் தொகையாக (EMD) சமர்ப்பித்துள்ளன.5ஜி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி, வயர்லெஸ் தொழில்நுட்ப சீர்மீகு மையம் மற்றும் ஐதராபாத் ஐஐடி ஆகியவை உருவாக்கியுள்ளன.

5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தொலைதூர மருத்துவ சேவை, தொலைதூர கல்வி, காணொலி காட்சி தொடர்பை மேம்படுத்துவது, ட்ரோன்கள் அடிப்படையிலான வேளாண் கண்காணிப்பு, 5ஜி போன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

-ந.பால வெற்றிவேல்

இதையும் படிக்க: ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.