கே.எஸ்.அழகிரி குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “கே.எஸ்.அழகிரி தனது கட்சியை ICU-வில் வைத்து உள்ளார். காங்கிரஸ் கட்சியே பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை ஒட்டவைக்க பாஜக Feviquick வாங்கித்தர தயாராக உள்ளது” என கிண்டல் அடித்தார். 

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அண்ணாமலை பேசுகையில், “அற்புதமான மாமனிதன் இரட்டை மலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதில் பாஜக பெருமைகொள்கிறது. தான் பிறந்த சமுதாயத்துக்காக தொண்டாற்றியவர் அவர். சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர். காந்தியை தமிழில் கையெழுத்து போட வைத்தவர். மேலும் முதல் SC பட்டதாரி என்ற பெருமைக்குரியவர் சீனிவாசன்.

image

இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்டித்தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பள்ளி மாணவர்கள் படிக்கும் வகையில் இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும். பாடப்புத்தகங்களை திருத்தியமைக்கும் போது இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாறை இடம்பெறச்செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கு இதை வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். மேலும் இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபத்துக்கு தனி நுழைவு வாயிலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். போலவே மணிமண்டபத்தை மேம்படுத்த வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

image

தொடர்ந்து பேசிய அவர், “முந்தைய பேட்டிகளில் தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டேவாக ஒருவர் உருவாவார் என்றே நான் சொன்னேன். ஏக்நாத் ஷிண்டே என்பவர் அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை; வேறு பெயரிலும் இருக்கலாம். அந்தவகையில் தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே யார் என்று ஊடகங்கள் தான் கண்டறிய வேண்டும். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே வெளியேறியதற்கும் பாஜகவுக்கு சம்பந்தம் கிடையாது. மக்களின் ஆதரவைப் பெற்று, அன்பைப் பெற்று, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருவதே பாஜகவின் விருப்பம். ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் விரும்பாது” என்றும் கூறினார்.

image

பின்னர், “தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாரத ரத்னா கிடைக்கவேண்டிய நபர் இளையராஜா. அவருக்கு எம்.பி., பதவியை குடியரசுத்தலைவர் வழங்கியுள்ளார். இளையராஜாவுக்கு எம்.பி., பதவி கிடைத்தது தனக்கு கிடைத்த பதவி என்று தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருவதாகவும் மிகவும் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தருணம் இது. அரசியலைத் தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர் இளையராஜா. அவரை அனைவரும் வாழ்த்த வேண்டும். சாதி, மதங்களைக் கடந்த மாமனிதர் அவர். சிங்கமாக, வைரமாக இருக்கிறார் இளையராஜா. அவருக்கு அடையாளம் தேவையில்லை, சொந்த உழைப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர். அனைவருக்கும் சமமானவர் இளையராஜா. அவரை எந்த அடையாளத்திலும் அடைக்கவேண்டாம்” என்று வேண்டுகோள் வைத்தார்.

மேலும் பேசுகையில், “இளையராஜா குறித்து பேசிய அண்ணாமலை அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதும் சரி. தமிழ்நாட்டு அரசை புகழ்ந்ததும் சரி. அது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து தான். இதில் அரசியல் இல்லை. தனது பார்வையை இளையராஜா வெளிப்படுத்தி உள்ளார். இளையராஜா தனது சொந்த உழைப்பால் பெற்ற பதவியை கொச்சைப்படுத்தி வருகின்றன எதிர்க்கட்சிகள்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

image

நடராஜர் கோவில் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “நடராஜர் கோயிலுக்கு மிகப்பெரிய சரித்திரம் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்றி வருகிறோம். இதில் என்ன புதிதாக கண்டுபிடித்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு? சிதம்பரத்தில் தவறு நடந்திருந்தால் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை ஏன் ஊடகங்கள் எதற்காக பேசவேண்டும்? இது திசைதிருப்பும் நடவடிக்கை. ஊடகங்களை சீண்டிவிடுகிறார் அமைச்சர் சேகர்பாபு. சிதம்பரம் நடராசர் கோயிலை ஹார்ஸ் செய்துவருகிறார் சேகர்பாபு” என மிக கடுமையாக குற்றம் சாட்டினர்.

image

கே.எஸ்.அழகிரி குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “கே.எஸ்.அழகிரி தனது கட்சியை ICU-வில் வைத்து உள்ளார். காங்கிரஸ் கட்சியே பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை ஒட்டவைக்க பாஜக Feviquick வாங்கித்தர தயாராக உள்ளது” என கிண்டல் அடித்தார். பின் “பாஜக உருண்டோ, புரண்டோ, நடந்தோ பாதயாத்திரையை நடத்தும். 2024-ல் 25 எம்.பி.க்களை பாஜக வெல்லும். அதை கே.எஸ்.அழகிரி பார்க்கத்தான் போகிறார். வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. திமுகவுடன் சேர்ந்ததால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக பொய்களை சொல்லி, ஏமாற்றி வெற்றி பெற்றது வரும் தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும்” என்றும் தெரிவித்தார்.

image

தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சியாக பாஜக தற்போது வந்துள்ளது. விரைவில் முதலிடத்தை நோக்கி செல்வோம். அதற்கான முயற்சி, உழைப்பை முன்னெடுப்போம். அவர் பாஜக வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. தமிழ்நாடு சார்ந்த விஷயங்களை பேசித்தான் வளர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.