மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அகில இந்திய மூத்த வீரர்களுக்கான தேர்வுக் குழு இந்த அணியை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. டிரினிடாட், போர்ட் ஆஃப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் ஆகிய 3 மைதானங்களில் இந்த போட்டி ஜூலை 22 – 27 முதல் நடைபெற உள்ளது.


மூத்த வீரர்களுக்கு ஓய்வு!

ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகிய மூத்த வீரர்கள் பிசிசிஐ அறிவித்துள்ள அணியில் இடம்பெற வில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை வென்ற ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Rift between Kohli and Rohit | BCCI official confirms rift between Virat  Kohli and Rohit Sharma, calls former ODI skipper selfish

கேப்டனாக தவான்! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். தீபக் ஹூடா, இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

Stats: Shikhar Dhawan - The beast of ODI tournaments

பண்ட் இல்ல! புது கீப்பர்!

ரிஷப் பண்ட் இந்த அணியில் இடம்பெற வில்லை. மாறாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். ஆக இந்த இருவருக்கும் கீப்பருக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது.

Not Rishabh Pant now Sanju Samson and Ishan Kishan get chance know the  opinion of 17 thousand people here ऋषभ पंत नहीं अब संजू सैमसन और ईशान किशन  को मिले मौका, यहां

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்),
ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்),

பேட்ஸ்மேன்கள்:

ருதுராஜ் கெய்க்வாட்,
சுப்மான் கில்,
தீபக் ஹூடா,
சூர்யகுமார் யாதவ்,
ஷ்ரேயாஸ் ஐயர்,
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்),

பவுலர்கள்

ஷர்துல் தாக்கூர்,
யுஸ்வேந்திர சாஹல்,
அக்சர் படேல்,
அவேஷ் கான் ,
பிரசித் கிருஷ்ணா,
முகமது சிராஜ்,
அர்ஷ்தீப் சிங்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.