பிரிட்டிஷ் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர், யூடியூப் கணக்குகளை முடக்கி அக்கணக்குகளில் கிரிப்டோ வர்த்தகத்தை ப்ரமொட் செய்யும் பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்ட ஹேக்கர்கள்.

ஜூலை 3 ஆம் தேதியான நேற்று பிரிட்டிஷ் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர், யூடியூப் கணக்குகளை ஹேக்கர்கள் முடக்கினர். இந்த ஹேக்கிங் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது. 362,000 பின்தொடர்பவர்ளை கொண்ட ட்விட்டர் பக்கமும் 178,000 சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனலும் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது ராணுவ பக்கங்களின் தகவல் பாதுகாப்பின் மீது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Image

ஏற்கனவே பதிவிடப்பட்ட பல பதிவுகள், வீடியோக்களை ஹேக்கர்கள் டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிரிப்டோ வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பதிவுகளும் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கில் வெளியாகி வருகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தின் யூடியூப் சேனலில் கிரிப்டோ பற்றி எலோன் மஸ்க் மற்றும் ஜாக் டோர்சி பேசும் பழைய வீடியோக்களை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர். இருப்பினும், “உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குங்கள்” என்ற வசனங்களை உள்ளடக்கிய பிட்காயின் மற்றும் ஈதர் போன்ற கிரிப்டோ வீடியோக்கள் வெளியாகின.

இதையடுத்து மீண்டும் ட்விட்டர் பக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராணுவம், “எங்கள் பக்கத்தில் ஏற்பட்ட தற்காலிகத் தடங்கலுக்கு மன்னிக்கவும். இந்த சம்பவத்தில் இருந்து முழு விசாரணை நடத்தி பாடம் கற்றுக்கொள்வோம். எங்களைப் பின்தொடர்ந்ததற்கு நன்றி, இப்போது வழக்கமான சேவை மீண்டும் தொடங்கும்.


இன்று முன்னதாக நிகழ்ந்த இராணுவத்தின் ட்விட்டர் மற்றும் யூடியூப் கணக்குகளின் முடக்கம் தீர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இராணுவம் தகவல் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அவர்களின் விசாரணை முடியும் வரை அது பற்றி கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது” என்று பதிவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.