மத்தியப் பிரதேசத்தில், அரசு ஒதுக்கிய நிலத்தில் விவசாயம் செய்த பழங்குடிப் பெண்ணை, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தீ வைத்து எரித்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட பெண் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண் மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்துக்கு அரசு நலத்திட்ட உதவியின் கீழ் கொஞ்சம் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், அந்த நிலத்தை ஆக்கிரமித்து வந்துள்ளனர். பின்னர் அண்மையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டு, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பழங்குடிப் பெண் தீ வைத்து எரிப்பு – மத்தியப் பிரதேசம்

இந்த நிலையில்தான், கடந்த சனிக்கிழமையன்று மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் ஆகியோர், அந்த நிலத்திலேயே பழங்குடிப் பெண்ணை தீ வைத்து எரித்திருக்கின்றனர். அப்போது தன் மனைவியைத் தேடி அந்த நிலத்துக்கு வந்த பழங்குடிப் பெண்ணின் கணவர், தன் மனைவி எரிக்கப்பட்டு வலியால் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கைது

பின்னர் உடனடியாக அவர் உடலில் பரவிய தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதையடுத்து, அந்த மூன்று பேர்மீது அந்தப் பெண்ணின் கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், மூவரில் இருவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.