ரசிகர்களுக்கு விருப்பமான `லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்துக்குள் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் `நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பு தளத்தில் மலர்ந்த காதல் இன்றைக்கு திருமணமாக நிகழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் நயன்தாராவின் சினிமா பயணம் குறித்த ஒரு சின்ன ரீ-விசிட்!

* டயானா மரியம் குரியன் தான் நயன்தாராவின் இயற்பெயர். சினிமாவுக்காக 30 பெயர்கள் மேல் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் ‘நயன்தாரா’ என்பதைத் தேர்ந்தெடுத்தார். இந்த வார்த்தையின் அர்த்தம் ‘நட்சத்திர கண்கள்’ என்பதாம். பொருத்தமாகத் தானே உள்ளது!

* கல்லூரி படிக்கும் போது மாடலிங் செய்து கொண்டிருந்தார். இயக்குனர் சத்யன் அந்திக்காடு ‘Manassinakkare’ படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். நயன்தாரா முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு `ஒரு படம் மட்டும் பண்ணிப் பார்க்கலாம்’ எனத் தயக்கத்தோடு தன் முதல் மலையாள படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

* தமிழில் முதல் அறிமுகம் ‘ஐயா’ படம். சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது.

நயன்தாரா

* நயன்தாராவின் அடுத்த தமிழ் படமே சூப்பர் ஸ்டார் உடன். சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த நயன்தாராவுக்கு அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியையும் பெயரையும் பெற்றுக்கொடுத்தது.

* சூர்யாவுடன் நடித்த ‘கஜினி’ படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்தடுத்து படங்களில் ஹீரோயின் ஆக நடித்த போதும் விஜய்யின் ‘சிவகாசி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடினார்.

* தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷ் உடன் நடித்த ‘லக்ஷ்மி’ படம் தான் நயன்தாராவுக்கு முதல் தெலுங்கு படம். படம் டோலிவுட்டில் பயங்கர ஹிட்.

* பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், வில்லு என தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நயன்தாரா

* தெலுங்கில் சீதையாக இவர் நடித்திருந்த ‘ஸ்ரீ ராமராஜ்ஜியம்’ படத்திற்கு பிலிம்பேர் விருது, நந்தி விருது கிடைத்தன.

* கொஞ்ச நாட்கள் ஒதுங்கியிருந்தவர் மீண்டும் திரைக்கு வந்தபோது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களாகக் கொடுத்து அதில் வெற்றியும் பெற்று காட்டினார்.

* 2014-ல் வெளியாகிய ‘அனாமிகா’ படம் பை-லிங்குவலாக வெளியானது. அவர் நடிக்கத் தொடங்கிய ஹீரோயின் சென்ட்ரிக் படத்தின் ஆரம்பம் அதுதான்.

* தனி ஒருவன், ராஜா ராணி, நானும் ரவுடி தான், விஸ்வாசம், பிகில், தர்பார், அண்ணாத்த படங்களில் டாப் ஹீரோக்களோடு நடித்து தன் நம்பர் 1 இடத்தையும் தக்க வைத்து கொண்டார்.

* மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண் இப்படி இவரை மையமாக கொண்ட படங்களின் லிஸ்ட் பெரிது.

* அறம் படத்தில் கண்ணியம் மிகுந்த கலெக்டராக அவர் நடித்தது பலருக்கும் பிடித்திருந்தது.

* மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு ஜாலியான அம்மன் கதாபாத்திம். இப்படி புதிய முயற்சிகளுக்கு அவர் ஒருபோதும் தயங்குவதில்லை.

*நயன்தாராவின் சினிமா பயணம் மாடலிங் தொடங்கி `லேடி சூப்பர் ஸ்டாரில்’ உச்சம் பெற்று இன்றைக்கு நல்ல படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் தன்னை சினி இண்டஸ்ட்ரியில் உருவாக்கிக் கொண்டிருப்பவருக்கு அந்த டைட்டில் பொருத்தமானதுதான்.

வாழ்த்துகள், நயன் – விக்னேஷ்!

நயன்தாரா நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.