கர்நாடகாவில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் மகள், 6-வது முயற்சியில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தும்குர் மாவட்டத்தைச் சேர்ந்த அருணா இந்திய அளவில் 308-வது ரேங்க் எடுத்து குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பெரும்பாலான விண்ணப்பதாரர்களைப் போல், குடிமைப்பணி தேர்வுக்கு தயாராவது அருணாவின் முதல் இலக்கு அல்ல. ஆரம்பத்தில், அவள் ஒரு பொறியியல் பட்டம் மற்றும் ஒரு சாதாரண வேலை பெற எண்ணினாள். ஆனால் வாழ்க்கை அவளுக்கு வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. அருணாவின் தந்தைக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளின் கல்விக்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அருணாவின் தந்தை கடந்த 2009-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தனது தந்தை போன்று விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் குடிமைப்பணி தேர்வுக்கு தயாரான அருணா, 5 முறை தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இதனிடையே பயிற்சி நிறுவனத்தை தொடங்கி இளைஞர்களுக்கு வகுப்பெடுத்து கொண்டே தேர்வுக்கு படித்து வந்த அருணா, 6-வது முயற்சியில் வெற்றிக்கனியை எட்டி பிடித்துள்ளார்.

Aruna M cracked UPSC in her sixth attempt

“யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நான் கனவு காணவில்லை. நான் 10,000 முதல் 15,000 வரை சம்பாதிக்கும் ஒரு சுதந்திரமான பெண்ணாக மாற விரும்பினேன். என் தந்தை தனது மகள்களை சுதந்திரமாக மாற்றுவதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். ஆனால் எனது பொறியியல் படிப்பின் போது, எங்களுக்கு கல்வி வழங்குவதற்காக அவர் செய்த கடன்களால் எனது தந்தையை இழந்தேன். அவரது மறைவுக்குப் பிறகு நான் சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். என் நாட்டின் விவசாயிகளுக்கு சேவை செய்வதன் மூலம் என் தந்தையின் தொலைந்த புன்னகையை நான் கண்டுபிடிக்க விரும்பினேன்,” என்று அருணா கூறினார்.

“என் தந்தையின் கனவு இப்போது நனவாகியுள்ளது, ஆனால் எனது தந்தையைப் போல தற்கொலை முயற்சியில் ஈடுபட விடாமல், எனது நாட்டின் விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது கனவு இப்போது தொடங்கும். எனக்கு எந்த பதவி கிடைக்கும் என்பது முக்கியமில்லை ஆனால் எல்லா பதவிகளும் இந்த துறையில் சமமான சக்தி வாய்ந்தவை. இப்போது நான் இந்த தருணங்களை எனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறேன். மேலும் எனது தந்தையின் கஷ்டத்திற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அருணா கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.