அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளான JEE ( Main), JEE ( Advanced) மற்றும் கடல்சார் படிப்புகளுக்காக நடத்தப்படும் IMU CET முதலியவற்றை பற்றி கடந்த வாரத்தில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக மற்ற தேர்வுகள் பற்றி இந்த வாரத்தில் பார்ப்போம்.

நீட் தேர்வு

தமிழகத்தால் தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கப்பட்டு வரும் தேர்வு மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட். இத்தேர்வை முதலில் சி.பி.எஸ்.சி தான் நடத்திக்கொண்டிருந்தது. பின்பு இந்தியாவின் பல்வேறு போட்டி தேர்வுகளையும் நடத்தக்கூடிய நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி (NTA) என்னும் முகமை இத்தேர்வை தற்போது நடத்திக்கொண்டிருக்கிறது.

எம்.பி.பி.எஸ் தொடங்கி BDS, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி என அனைத்து படிப்புகளுக்கும் தற்போது நீட் தேர்வு கட்டாயம் தேவை. இத்தேர்விற்கான பாடத்திட்டம் தொடங்கி இந்தியாவில், தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ சீட்களின் எண்ணிக்கை வரை அனைத்தை பற்றியும் இந்த வார ஆனந்த விகடனின் ‘நாளை என்ன வேலை’ தொடரில் எழுதியுள்ளார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

மேலும் ஐந்து வருட Integrated Msc படிப்பிற்கான NEST தேர்வு, கேட்டரிங், டிசைன் மற்றும் விவசாய படிப்புகளுக்கான நுழைவுக்கு தேர்வு குறித்தும் அதில் விளக்கியுள்ளார்.

இது தவிர பொறியாளர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய employability skills குறித்து மனிதவள மேம்பாட்டு ஆலோசகரான சுஜித்துடன் உரையாடியுள்ள காணொளிக்கான லிங்க் கீழே,

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.