சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் என பெருமிதம் தெரிவித்தார். 

சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் முதன்முறையாக சென்னையில் சிலை கலைஞர் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்புக்குப்பின் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். அப்போது, ”கருணாநிதியின் சிலை நேரில் பேசுவது போல் உள்ளது. அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமை செயலகத்தை கட்டினார் கலைஞர். எனவே சிலை அமைக்க அந்த இடத்தை தேர்ந்தெடுத்தவர் முதல்வர் தான். 

image

அப்பனுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின். டெல்லியில் இருந்து கொண்டு வேட்டி சட்டை கட்டுபவர் குடியரசு துணைத்தலைவர். அதுவும் தமிழகத்தில் கட்டுவதுபோல் கட்டுவார். அதில் மற்றொருபவர் ப.சிதம்பரம். கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும்” என்று பெருமிதம் தெரிவித்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.