சென்னை ‘தி இந்து’ சார்பில் நடத்தப்படும் ‘நம்ம ஊரு நம்ம ருசி’ என்ற சமையல் போட்டியின் 3-ம் பதிப்பு ஏப்ரல் 23, 2022 முதல் நடைபெற்று வருகிறது. ‘நம்ம ஊரு நம்ம ருசி’ சமையல் போட்டியின் தொடக்க நிலை தேர்வுகள் தமிழகத்தில் 20 இடங்களில் நடைபெறவுள்ளன. சென்னையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

திண்டுக்கல்: இப்போட்டியின் தொடக்க நிலை தேர்வு திண்டுக்கல்லில் மே 28, 2022 (சனிக்கிழமை), காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. ‘பார்சன்ஸ் கோர்ட் யூனிட், பார்வதி நடராஜன் ஹோட்டல், 85, மெங்கல்ஸ் சாலை’ என்ற முகவரியில் இத்தேர்வு நடைபெறுகிறது.

மதுரை: மே 29 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரையில் தொடக்க நிலை தேர்வு நடைபெறுகிறது. ‘ஜே.சி. ரெசிடென்சி (JC Residency), 14, லேடி டோக் கல்லூரி சாலை, சின்ன சொக்கிகுளம்’ – என்ற முகவரியில் இத்தேர்வு நடைபெறும்.

மறந்துராதீங்க போட்டியாளர்களே!

போட்டிக்கு காய்கறி உணவுகள், இறைச்சி உணவுகள், காலை உணவு, சிற்றுண்டி, இனிப்பு வகைகள் என எதை வேண்டுமானாலும் சமைத்துக் கொண்டு வரலாம். குறைந்தபட்சம் 2 உணவுகளை சமைத்திருக்க வேண்டும். அதில் ஒன்று தமிழகத்தின் சுவையை எடுத்துக்காட்டும் வகையிலும் ‘நம்ம ஊரு நம்ம சேவரிட் பாஸ்தா’ கொண்டும் சமைத்து எடுத்து வர வேண்டும். மேலும் ஆர்.கே.ஜி நெய், கார்டியா அட்வான்ஸ்டு கடலை எண்ணெய், சேவரிட், எல்ஜி பெருங்காயம், நாகா உணவுப் பொருட்கள், எவரெஸ்ட் மசாலா ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுகளுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பிடப்பட்டுள்ள பிராண்டுகளின் உணவுப் பொருட்களைக் கொண்டு சமைத்ததற்கு அடையாளமாக, போட்டியாளர்கள் அவற்றின் கவர்களை கொண்டு வர வேண்டும்.

குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் போட்டி இருக்கு!

இந்நிகழ்ச்சியின் அங்கமாக சிறுவர்கள் (வயது 10 முதல் – 18 வரை) மற்றும் இளைஞர்கள் (வயது 19 முதல் – 25 வரை) திறமையை வெளிப்படுத்தும் விதமாக நம்ம ஊரு நம்ம சேவரிட் பாஸ்தா சமையல் போட்டி நடைபெறும், இதில் பங்கேற்க சேவரிட் பாஸ்தாவை உபயோகித்து அவரவருக்கு பிடித்த உணவை வீட்டில் சமைத்து எடுத்து வரவும். Dr. செஃப் தாமு அவர்கள் இரு வயது பிரிவில் இருந்தும் தலா ஒரு வெற்றியாளரை தேர்வு செய்வார். கலந்துகொள்ளும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செஃப் தாமு அவர்கள் சான்றிதழ் வழங்குவார்.

போட்டியில் பங்கேற்க…

கின்னஸ் சாதனையாளரும், புகழ்பெற்ற சமையல் கலை நிபுணருமான செஃப் தாமு அவர்கள் இப்போட்டியின் நடுவராக செயல்படுகிறார். ஒவ்வொரு நகரத்தில் இருந்தும், தொடக்க நிலை தேர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 போட்டியாளர்கள் சென்னையில் ஜூலை 23-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். போட்டியில் பங்கேற்க bit.ly/OSOT2022 என்ற லிங்க் மூலம் பதிவு செய்யலாம். அல்லது பெயர், ஊர் மற்றும் உணவின் பெயர் ஆகியவற்றை டைப் செய்து 9941255695 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம் (Name, City, Dish Name – இவ்வாறு டைப் செய்து அனுப்பவும்).

விடியம் அப்ளையன்சஸ், சேவரிட், மதுரம் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்போட்டிக்கு, ‘தி இந்து’வுடன் ஆர்.கே.ஜி நெய், கார்டியா அட்வான்ஸ்டு கடலை எண்ணெய், எல்ஜி பெருங்காயம், நாகா ஃபுட்ஸ், டிவினிட்டி, ஐடிசி மங்கள்தீப், கரூர் வைஸ்யா வங்கி, எவரெஸ்ட் மசாலா ஆகிய நிறுவனங்களும் தங்களின் ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்நிகழ்ச்சியில் ஸ்பான்சராக இணைய 09841011949 என்ற எண்ணில் அழைக்கலாம்.

போட்டியாளர்கள் விண்ணப்பிக்க: bit.ly/OSOT2022

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.