தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் அணிகளை சாய்த்து அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிளே ஆஃப் வரை அவர் வெற்றிகரமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Sit down and decide the best template': KL Rahul highlights 'brand of  cricket' India need to play after poor T20 WC | Cricket - Hindustan Times

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ஜொலித்த தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் அடியெடுத்து வைத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் அணியில் இடம்பெறாத யஸ்வேந்திர சாஹல் பர்பிள் கேப்புடன் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைகிறார். இளம் நட்சத்திரங்களாக ஐபிஎல்லில் ஜொலித்த உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.